தென்கொரியா: கிருமித்தொற்று நிலவரம் மேம்பட்டது

சோல்: தென்கொரியாவில் 20க்கும் கீழான கிருமித்தொற்று சம்பவம் நேற்று பதிவானது. புதிதாக நேற்று 19 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 11,037 ஆனது. ஒரு வாரத்திற்குப் பின், அதாவது மே 9ஆம் தேதிக்குப் பின்னர் 20க்கும் கீழ் தொற்று எண்ணிக்கை பதிவானது நேற்றுதான். 19 பேரில் 10 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. புதிதாக இருவர் மாண்டதைத் தொடர்ந்து மரண எண்ணிக்கை 262 ஆனது. மேலும் மரண விகிதம் 2.37 ஆக உள்ளது. ஜனவரி 3ஆம் தேதி முதல் 740,000 பேரிடம் கொரோனா கிருமி பரிசோதனை நடத்தப்பட்டதில் 711,265 பேருக்கு தொற்று இல்லை என்று உறுதியானது. 18,343 பேரிடம் பரிசோதனை தொடருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!