கிருமித்தொற்றைக் கண்டறிய மோப்ப நாய்களுக்குப் பயிற்சி

லண்டன்: மனிதர்களிடம் கொரோனா கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தென்படும் முன்னரே மோப்ப நாய்கள் இதனை மோப்பம் பிடித்து கண்டுபிடிப்பதற்கு அவற்றுக்குப் பயிற்சி அளிப்பதற்கான முயற்சிகள் பிரிட்டனில் செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பிட்ட சில புற்றுநோய் வகைகள், மலேரியா, பார்க்கின்சன்ஸ் நோய் உள்ளிட்டவற்றைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்களுக்கு ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.

அதேபோல மனிதர்களிடம் கொவிட்-19 கிருமி உள்ளதைக் கண்டுபிடிக்க ‘லெப்ரடோர்’ மற்றும் ‘காக்கர் ஸ்பேனியல்’ ரக நாய்களுக்குப் பயிற்சி அளிக்க முடியுமா என்பதைப் புதிய ஆய்வு ஒன்று ஆராயவிருக்கிறது.

லண்டன் தூய்மை மற்றும் வெப்பமண்டலப் பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் டர்ஹம் பல்கலைக்கழகத்துடனும் ‘மெடிக்கல் டிடெக்‌ஷன் டாக்ஸ்’ என்ற நன்கொடை அமைப்புடனும் இணைந்து முதற்கட்ட சோதனைகளை நடத்தவுள்ளனர்.

இந்த ஆரம்பகட்ட ஆய்வுக்காக லண்டன் மருத்துவமனைகளிலுள்ள கொரோனா நோயாளிகளின் வாடை மாதிரிகள் சேகரிக்கப்படும். இந்த மாதிரிகளிலிருந்து கொரோனா கிருமியைக் கண்டுபிடிக்க ஆறு மோப்ப நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

“மலேரியாவுக்குத் தனிப்பட்ட வாடை இருப்பதாக நாங்கள் முன்னதாகச் செய்திருந்த ஓர் ஆய்வு காட்டியது,” என்று ஆய்வை வழிநடத்தும் பேராசிரியர் ஜேம்ஸ் லோகன் தெரிவித்தார்.

“ஒருவருக்கு சுவாசப் பிரச்சினை இருந்தால் உடலிலிருந்து வெளியாகும் வாடை மாறக்கூடும். இதன் அடிப்படையில், மோப்ப நாய்களால் கொவிட்-19 கிருமித்தொற்றைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

“இந்த அணுகுமுறை வெற்றியடைந்தால் கிருமித்தொற்றைக் கண்டுபிடிக்கும் முறையில் புரட்சி ஏற்படும். கூடுதலாக பலரை இந்த அணுகுமுறை மூலம் பரிசோதிக்கலாம்,” என்று அவர் கூறினார்.

இவ்வாறு பயிற்சி பெற்றுள்ள நாய்கள் ஒரு மணி நேரத்தில் 250 பேர் வரை பரிசோதிக்க முடியும் என்று ‘மெடிக்கல் டிடெக்‌ஷன் டாக்ஸ்’ திரட்டிய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!