பயன்படுத்தப்பட்ட முகக்கவசம்; ஆய்வில் வெளியான மருத்துவர்களின் அவலநிலை

தோக்­கியோ: பயன்­ப­டுத்­தப்­பட்ட முகக்­க­வ­சங்­க­ளையே மீண்­டும் பயன்­ப­டுத்­து­வது, மிகக் குறை­வான சம்­ப­ளம் போன்ற மோச­மான வேலை சூழ்­நி­லை­யில் ஜப்­பா­னிய முன்­னிலை ஊழி­யர்­கள் பணி­பு­ரி­வ­தாக தொழிற்­சங்­கத்­தின் ஆய்வு ஒன்­றில் தெரிய வந்­துள்­ளது.

ஏப்­ரல் மாதத்­தி­லி­ருந்து மே 6ஆம் தேதி சுமார் 170 மருத்­து­வர்­க­ளி­டம் இணை­யம் வழி இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

அதில் முக்­கால்­வாசி பேர் கொரோனா கிரு­மித்­தொற்று முன்­னிலை ஊழி­ய­ராக பணி­பு­ரி­வ­தா­க­வும் ஐந்­தில் நால்­வர் தங்­கள் வேலைக்­கேற்ற ஊதி­யம் கிடைக்­க­வில்லை என்­றும் தெரி­வித்­துள்­ள­னர்.

ஜென்­கோகு இஷி தொழிற்­சங்­கம் தனது இணை­யத்­த­ளத்­தில் இந்த ஆய்வு முடிவை வெளி­யிட்­டது. மருத்­து­வர்­க­ளுக்­குத் தொற்று ஏற்­ப­டு­வ­தைத் தடுக்­கும் வகை­யில் பயன்­ப­டுத்­தப்­படும் ‘என்95’ முகக்­க­வ­சத்தை ஒரு­முறை மட்­டுமே பயன்­ப­டுத்­த­வேண்­டும் என்று கூறப்­ப­டு­கிறது.

ஆனால் பயன்­ப­டுத்­திய முகக் கவ­சத்­தையே தாங்­கள் மீண்­டும் மீண்­டும் பயன்­ப­டுத்­து­வ­தாக 31 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­த­னர்.

இது­த­விர ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­களில் சுமார் 70 விழுக்­காட்­டி­னர், கொரோனா தொற்று சூழலை முறை­யாக கையாள அர­சாங்­கம் தவ­றி­விட்­ட­தா­க­வும் கூறி­னர்.

மருத்­து­வ­ம­னை­கள் மற்­றும் மருத்­துவ ஊழி­யர்­க­ளுக்­குத் தேவை­யான பாது­காப்பு கவச உடை­கள் வழங்­கு­வ­தி­லும் தேவை­யான நிதி உதவி செய்­வ­தி­லும் தேசிய, உள்­ளூர் அர­சாங்­கங்­கள் தோற்றுவிட்­ட­தா­க­வும் சில ஜப்­பா­னிய மருத்­துவ நிபு­ணர்­கள் கூறி­னர். அய்வு முடிவு குறித்து ஜப்­பா­னிய சுகா­தா­ரத் துறை இது­வரை எந்த விளக்­க­மும் அளிக்­க­வில்லை.

Medical workers at St. Marianna Medical University Hospital in Kawasaki, south of Tokyo, on May 4, 2020.PHOTO: REUTERS

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!