கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தும் ஐரோப்பிய நாடுகள்; மக்கள் உற்சாகம்

ரோம்: ஐரோப்பாவில் இத்தாலி, ஸ்பெயின் உட்பட மேலும் பல நாடுகள் கொரோனா கிருமித்தொற்று காரணமாக அமல்படுத்தியிருந்த கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகின்றன.

இதில் குறிப்பாக இத்தாலியில் மதுபானக் கூடங்கள், சிகை அலங்காரக் கடைகள் உட்பட பெரும்பாலான வர்த்தகங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஸ்பெயின் நாட்டிலும் மட்ரிட், பார்சிலோனா நகரங்கள் தவிர மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.

அங்கு 10 பேர் வரை குழுக் களாக சந்திக்க அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

ஸ்பெயின், இத்தாலி உட்பட ஐரோப்பிய நாடுகளில் கொேரானா கிருமித்தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் தளர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட முடக்கநிலைக்குப் பின்னர் ஞாயிறன்று மிகக் குறைவானவர்களே மரணமடைந்ததாக சொல்லப்படுகிறது.

அன்று மட்டும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 145 என அறிவிக்கப்பட்டது.

இது கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதியன்று இறந்த 900 பேர்களுடன் ஒப்பிடுகையில் பெரிய முன்னேற்றம் என்பதில் சந்தேகமில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இதேபோல், ஸ்பெயினில் முதல் முறையாக கொரோனா கிருமித் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 100க்குக் கீழே வந்துள்ளதை அரசு தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டது.

ஆனால், இந்தப் பிரச்சினையில் மெத்தனமாக இருந்துவிட்டால், இரண்டாவது அலையாக மீண்டும் பலர் இந்த நோய்க்கு ஆளாக நேரிடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே, இத்தாலியில், மதுபானக் கூடங்கள், சிகை அலங்கார நிலையங்கள், சிற்றுண்டி நிலையங்கள், கடைகள் போன்றவை தங்கள் வாடிக்கையாளர்கள் ஒருவருக்கு ஒருவர் தூர இடைவெளியைக் கடைப்பிடிக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே அவற்றை திறக்க அனுமதிக்கப்படுவர்.

கத்தோலிக்க தேவாலயங்கள் வழிபாட்டு நிகழ்வுகளை மீண்டும் தொடங்க உள்ளன. எனினும், தூர இைடவெளியை அமல்படுத்துவதில் கடுமை காட்டப்படும் என்றும் வழிபாட்டுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியமாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், பெல்ஜியத்தில் தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளை கடுமையான கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

போர்ச்சுகல், கிரீஸ், டென்மார்க், அயர்லாந்து ஆகிய நாடுகளும் முடக்கநிலையை தளர்த்த முடிவு செய்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!