செய்திக்கொத்து - 21-05-2020 - உலகம்

கொரோனா வெளிப்பாடு மாறுபடக்கூடும்: சீன மருத்துவர்கள்

பெய்ஜிங்: வூஹானில் ஏற்பட்ட கொரோனா தாக்கத்துடன் ஒப்பிடுகையில், அந்நாட்டின் ​​வடகிழக்குப் பகுதியில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடையே, கொரோனா தொற்றின் வெளிப்பாடு மாறுபட்டுள்ளதாக சீன மருத்துவர் கள் கண்டறிந்துள்ளனர். இது நோய்க்கிருமியை கண்டறியும் முயற்சிகளைச் சிக்கலாக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் கிருமியின் தாக்கம் குறிப்பிடத்தக்க வழிகளில் மாறுகிறதா என்பதை விஞ்ஞானிகளால் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் முதற்கட்டத்தில் வூஹானில் அவர்கள் நோயாளிகளை கவனித்ததைவிட தற்போது முழுமையாக கவனிக்க முடிகிறது என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.


ரஷ்யாவில் ஒரே நாளில் 135 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரமாக உயர்ந்துள்ளது. நேற்று அங்கு 135 பேர் உயிரிழந்தனர். இது ரஷ்யாவில் ஒரே நாளில் ஏற்பட்டுள்ள ஆக அதிகமான உயிரிழப்பாகும். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தைக் கடந்துவிட்டது என்றாலும், அன்றாட பாதிப்பு முதல்முறையாக குறைந்தது.

மற்ற நாடுகளைவிட ரஷ்யாவில் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக உள்ளது உலக நாடுகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய அதிகாரிகள் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதாகவும் கூறப்படுகிறது.


போலிசை திட்டியவருக்கு அபராதம்

பெட்டாலிங் ஜெயா: சாலை தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலிஸ்காரரை ‘முட்டாள்’ எனத் திட்டிய 41 வயது பெண்ணுக்கு 3,100 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரியை திட்டியதற்காக 100 ரிங்கிட், அவரை வேலை செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்காக 3,000 ரிங்கிட்டும் விதிக்கப்பட்டது. இச்சம்பவம் மார்ச் 31ஆம் தேதியன்று நடந்தது.

இதற்கிடையே, நோன்புப் பெருநாளை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதைத் தடுக்கும் வகையில் போலிசார் சாலை தடுப்புகளை அதிகரித்துள்ளனர்.


விற்பனையை நிறுத்திய பிரபல நிறுவனம்

வாஷிங்டன்: உலகின் மிகப்பெரிய குழந்தை சுகாதாரப் பொருள் தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், கனடா மற்றும் அமெரிக்காவில் குழந்தைகள் பவுடர் விற்பனையை நிறுத்தியுள்ளது. குழந்தைகள் பவுடர் மீதான ஆர்வம் குறைந்து வருவதையடுத்து நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. என்றாலும் மற்ற நாடுகளில் குழந்தைகள் பவுடர் விற்பனை தொடரும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!