முக்கிய மருத்துவப் பொருட்களுக்கு சீனாவை நம்பியிருக்கும் திட்டத்தை கைவிட பிரிட்டன் முடிவு

லண்டன்: பிரிட்டனுக்குத் தேவையான முக்கிய மருத்துவப் பொருட்களுக்கு சீனாவை மட்டுமே நம்பி யிருக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அரசாங்க அதிகாரிகளுக்கு பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டு உள்ளார்.

‘த டைம்ஸ்’ நாளேடு இதனை தெரிவித்தது. ‘தற்காப்பு செயல்திட்டம்’ என்ற பெயரில் சீனாவை நம்பியிருக்கும் போக்கை கைவிடுவதற்கான மாற்று திட்டங்கள் வகுக்கப்பட்டு வரு கின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டை நம்பியிருக்கும் முக்கிய பொருட்கள் அடையாளம் காணப்படும். இதற்காக இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று நாளேட்டின் செய்தி குறிப் பிட்டது.

உணவு அல்லாத முக்கிய பொருட்களுக்கு தனிப்பட்ட ஒரு நாட்டை மட்டுமே நம்பியிருக்காமல் பல நாடுகளிலிருந்து இறக்குமதியை பரவலாக்குவது திட்டத்தின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் களிடையே பேசிய பிரதமர் ஜான்சன், பிரிட்டனின் தகவல் தொழில்நுட்பத்தைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

இதில் தனிநபர் பாதுகாப்புச் சாதனங்கள், மருந்துகள் ஆகிய வற்றையும் உள்ளடக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.

கொரோனா கிருமி பரவல் சூழ்நிலையை சீனா கையாண்ட விதத்தை உலக நாடுகள் குறைகூறி வரும் வேளையில் பிரிட்டன் இவ் வாறு முடிவு செய்துள்ளது.