டிரம்ப்: இந்தியா-சீனாவை சமாதானம் செய்யத் தயார்

புதுடெல்லி: இந்தியா-சீனாவுக்கு இடையிலான எல்லைப் பிரச் சினையில் சமாதானம் செய்து வைக்கத் தான் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், “இரு நாடுகளுமே ஒன்றுக்கொன்று பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடிய பிரச்சினைதான் இது,” என இந்தி யாவுக்கான சீனத் தூதர் சன்வெய்டாங் தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் உருவாகி வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்தியாவுடனான எல்லை நிலையாகவும் கட்டுக்குள் உள்ளதாகவும் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் தெரிவித்துள் ளார்.

பேச்சுவார்த்தை, ஆலோசனை கள் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வழிமுறைகள் இரு நாடுகள் இடையே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.