ஹாங்காங்கில் தேசிய கீத மசோதா நிறைவேறியது

ஹாங்காங்: ஹாங்காங் நாடாளுமன்றத்தில் நேற்று கடும் எதிர்ப்புகளுக்கு இடையே சர்ச்சைக்குரிய தேசிய கீத மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதன்படி சீனாவின் தேசிய கீதத்தை இனி அவமதித்தால் குற்றச்செயலாகும்.

சீனா, ஹாங்காங் மீது தனக்கு உள்ள பிடியை இறுக்கும் ஒரு பகுதி யாக இந்த மசோதாவை நிறை வேற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்புதான் ஹாங்காங்கிற்கான தேசிய பாது காப்பு சட்டத்தை இயற்ற சீனாவின் தலைவர்கள் ஒப்புதல் வழங்கினர்.

இதற்கு அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனால் ஹாங்காங்கின் தனிப் பட்ட உரிமைகள், சுயாட்சி பாதிக்கப் படும் என்று உலகத் தலைவர்கள் எச்சரித்திருந்தனர்.

இந்த நிலையில் தேசிய கீத மசோதா ஹாங்காங்கில் நிறை வேற்றப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின்படி ஹாங்காங் கில் உள்ள தொடக்கப்பள்ளி, உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ‘தொண்டூழியர்களின் அணிவகுப்பு’ எனும் சீன தேசிய கீதத்தை வர லாற்றுப் பின்னணியுடன் பாட கற்றுத் தரப்படும்.

மேலும் சீன தேசிய கீதத்தை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 50,000 ஹாங்காங் டாலர் (S$9,000) வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

இதற்கிைடயே தியனான்மென் சதுக்க சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு தடை விதிக்கப் பட்டது. இதற்கு, கொவிட்-19 கிருமிப் பரவலை அரசு காரணம் காட்டியிருந்தது.

ஆனால் தடையையும் மீறி பலர் வீட்டில் இருந்தும் இதர வழிகளிலும் தியனான்மென் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1989ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி சீனாவில் தியனான் மென் சதுக்கத்தில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பீரங்கிப் படை ஏவப்பட்டது.

இதில் ஏராளமானவர்கள் நசுங்கி செத்தனர். ஆனால் சில நூறு பேர் முதல் சில ஆயிரம் பேர் வரை இறந்திருக்கலாம் என பெய்ஜிங் கூறி வருகிறது.