பிரிட்டன் இசை நிகழ்ச்சியில் 22 அதிகாரிகள் காயம்

லண்டன்: பிரிட்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டவிரோத இசை நிகழ்ச்சியில் கலவரம் மூண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொேரானா பரவல் காரணமாக விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் ஒன்று கூடலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி பிரிக்சன் வட்டாரத்தில் இசை நிகழ்ச்சியை சிலர் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து கூச்சலாக இருப்பதாக குடியிருப்பாளர் ஒருவர் புகார் தெரிவித்ததால் அங்கு போலிசார் விரைந்தனர்.

ஆனால் அங்கிருந்தவர்கள் அதிகாரிகளைத் தாக்கினர். சுற்றுக் காவல் காரும் அடித்து நொறுக்கப்பட்டது. இதில் 22 அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்தது. இருவருக்கு மட்டும் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் யாருக்கும் மோசமான காயம் ஏற்படவில்லை என்று அமைச்சு கூறியது.

அதிகாரிகள் தாக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. போலிசாரின் விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!