மெல்பர்ன் புறநகர் பகுதிகள் முடக்கம்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகருக்கு வடக்கே 300,000க்கும் அதிகமானோர் வசிக்கும் புறநகர்ப் பகுதிகளை முடக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

நேற்று தொடங்கி ஒரு மாத காலத்திற்கு அப்பகுதிகள் முடக்கப்பட்டிருக்கும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் இரண்டாவது ஆகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட விக்டோரியா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களாக கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் இரட்டை இலக்கில் பதிவானதைத் தொடர்ந்து, தொற்றைக் கட்டுப்படுத்த முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பல நாடுகளைவிட ஆஸ்திரேலியா நன்றாக செயல்பட்டு வந்தது.

எனினும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து நாட்டின் சில பகுதிகளில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதால் இரண்டாவது கிருமித்தொற்று அலை எழுமோ என்ற அச்சம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை சுமார் 7,920 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கிருமித்தொற்று பாதிப்பால் 104 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெல்பர்ன் நகருக்கு அருகே 30க்கும் அதிகமான புறநகர்ப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டுப்பாடுகள் மீண்டும் நடப்புக்கு வந்தன.

உணவு, மளிகைப் பொருட்களை வாங்குவது, மருத்துவரைப் பார்ப்பது, வேலைக்குச் செல்வது, உடற்பயிற்சி போன்ற நடவடிக்கைகளுக்காக மட்டும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லலாம்.

விக்டோரியாவின் எஞ்சிய பகுதிகளில் அண்மையில் உணவகங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள், திரை அரங்குகள் போன்றவை மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், மெல்பர்ன் புறநகர்ப் பகுதிகளில் இப்போது கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்து உள்ளன.

விக்டோரியாவில் அண்மையில் 20,682 பேருக்கு கிருமித்தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 73 பேருக்கு நேற்று முன்தினம் தொற்று உறுதி செய்யப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!