இந்திய- இலங்கை திட்டத்தில் சிக்கல்

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள கிழக்கு கொள்கலன் முனையத்தை உருவாக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தத் துறைமுகத் திட்டம் தொடர்பாக இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கையின் முந்தைய சிறிசேன அரசாங்கம் ஆகிய வற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத் தானது. ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டு ஆன நிலையில் திட்டத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, துறைமுகத் திட்டத்தை ஆராய ஐவர் குழுவை அமைத்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்சே, “ஜெயா கொள்கலன் முனையம், கிழக்கு கொள்கலன் முனையம் ஆகியவை அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை,” என்று கூறியுள்ளார்.

இலங்கையின் துறைமுக ஊழியர்கள், சீனா உருவாக்கும் முனையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இந்தியாவின் திட்டத் துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இதனால் சீனா பின்னணியில் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஏற்கெனவே இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தை மேம்படுத்துவதாகக் கூறி சீனா தனது வசம் கொண்டுவந்துள்ளது.