சீனாவின் விண்கலம் பாய்ந்தது

பெய்ஜிங்: சீனா, ஹைனான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து செவ்வாய்க் கோள ஆய்வு கலத்தை நேற்று வெற்றிகரமாக விண்வெளியை நோக்கி பாய்ச்சியது. டியான் வென்-1 திட்டத்தின் ஒரு பகுதியாக ‘லாங் மார்ச் 5 ஒய்-4’ உந்துகணையில் வைத்து ஆய்வுக்கலம் செலுத்தப்பட்டது. செவ்வாய்க்கோளத்தில் இறங்கி சோதனையிடும் வகையில் விண்கலம் வடி வமைக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் செவ்வாய்க் கோளத்தை ஆய்வு கலம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.