ஹாங்காங்கில் 118 பேர் பாதிப்பு

ஹாங்காங்: ஹாங்காங்கில் நேற்று புதிதாக 118 பேர் கிருமித் தொற்றுக்கு ஆளாகினர். இவற்றில் 111 சமூக அளவில் பரவிய சம்பவங்களாகும். கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக புதன்கிழமையிலிருந்து கட்டாய சமூக இடைவெளி அமலுக்கு வந்துள்ளது. இவ்வாண்டு ஜனவரியிலிருந்து ஹாங்காங்கில் 2,000 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 14 பேர் உயிரிழந்தனர்.