பிலிப்பீன்சில் புதிதாக 3,226 பேருக்கு கிருமித்தொற்று

மணிலா: பிலிப்பீன்சில் நேற்று புதிதாக 3,226 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் கிருமித்தொற்றால் மேலும் 46 பேர் உயிர் இழந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பிலிப்பீன்சில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 106,330ஐ எட்டியுள்ளது. கிருமித்தொற்றால் இதுவரை 2,104 பேர் உயிரிழந்துவிட்டனர்.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த தலைநகர் மணிலாவிலும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் இன்று முதல் கடுமையான முடக்கநிலையை பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே அறிவித்து உள்ளார். இந்த முடக்கநிலை ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏறத்தாழ 12 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட மணிலாவில் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் வேலைக்குச் செல்லவும் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைத் துறையில் இடம்பெறாத முடிதிருத்தும் கடைகள் போன்ற வர்த்தகங்கள் மறுபடியும் மூட வேண்டியுள்ளது. தேவாலயங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மணிலாவைச் சுற்றியுள்ள பகுதிகள் இருமாத காலமாக முடக்கப்பட்டிருந்தன. ஜூன் 1ஆம் தேதிதான் முடக்கநிலை நீக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!