போதைப்பொருள் கடத்திய பூனை சிறையிலிருந்து தப்பியோட்டம்

இலங்கை சிறையில் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் பிடித்து அடைத்து வைக்கப்பட்டிருந்த பூனை ஒன்று தப்பிச் சென்றது. 

கைபேசி சிம் அட்டைகள் 2, கொஞ்சம் போதைப்பொருள், ரகசிய குறியீடு போன்றவற்றைக் கொண்ட பிளாஸ்டிக் பை ஒன்று பூனையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்ததை போலிசார் கண்டுபிடித்தனர். அதனைப் பிடித்து அடைத்து வைத்திருந்தனர்.

இலங்கையில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கு வெளியிலிருந்து போதைப்பொருள், கைபேசிகள், சிம் அட்டைகள் போன்றவை சட்டவிரோதமாக அனுப்பப்படுவதாக கூறப்பட்டது.

சிறைச்சாலையின் மதிலுக்கு வெளிப்புறத்திலிருந்து பூனை மூலம் சிறைக்குள் அத்தகைய பொருட்கள் அனுப்பப்படுவதாக சந்தேகிக்கப்பட்டது, பிடிபட்ட பூனையால் ஊர்ஜிதமானது.

தற்போது சிறையில் அடைக்கப்பட்ட பூனை தப்பிச்சென்று விட்டதால், அதனைத் தேடிப் பிடிக்கும் பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon