சுடச் சுடச் செய்திகள்

கொவிஷீல்டு மருந்து சென்னைக்கு வந்தது; 300 பேரிடம் பரிசோதனை

கொவிட்-19 கிருமிப் பரவலை முறியடிக்கும் வகையில்,  மருந்தின் தன்மையைப் பரி சோதித்துப் பார்ப்பதற்காக ‘கொவிஷீல்டு’ தடுப்பூசி மருந்துகள் புனேவில் இருந்து சென்னை வந்து சேர்ந்துள்ளன. 

இவை 300 பேரிடம் பரிசோதிக்கப்பட உள்ளதாகவும் இதற்கான பரிசோதனை வரும் 10ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம்  கூறுகையில், “கொரோனா  கிருமியைத் துடைத்தொழிக்கும் வகையில், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்  ‘கொவிஷீல்டு’ மருந்தைக் கண்டுபிடித்து உள்ளது.

“இவற்றில் 300 ஊசி மருந்துகள் டெல்லியில் உள்ள ‘சீரம் இன்ஸ்டியூட்’ மூலம்  தமிழக அரசுக்கு கிடைத்துள்ளன. 

“சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 150 பேருக்கும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் 150 பேருக்கும்  ‘கொவி ஷீல்டு’ தடுப்பூசி போடப்பட்டு பரிசோதனை செய்யப்பட உள்ளது.

ஒருவருக்கு தடுப்பூசி போடப்பட்ட பின் 14வது, 24வது நாட்களில் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான சோதனை நடத்தப்படும்,” என்றார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon