அமைதிக்கான நோபெல் பரிசு: பசி, பட்டினி தீர்க்கும் அமைப்புக்கு கிடைத்தது

லண்­டன்: இவ்­வாண்­டின் அமை­திக்­கான நோபெல் பரிசு ஐநா­வின் உலக உண­வுத் திட்ட அமைப்­புக்கு (WFP) கிடைத்­துள்­ளது. கொரோனா கொள்ளை நோய் பர­வ­லால் பசி­யும் பட்­டி­னி­யும் பெருகி வரும் நிலை­யில் ஏமன் முதல் வட­கொ­ரியா வரை பல மில்­லி­யன் மக்­க­ளுக்கு இந்த அமைப்பு உண­வ­ளித்து ஆத­ர­வுக் கரம் நீட்டி வரு­கிறது.

இத்­தா­லி­யின் ரோம் நக­ரைத் தலை­மை­யி­ட­மா­கக் கொண்டு இயங்கி வரும் இந்த அமைப்பு வறு­மை­யில் வாடும் மக்­க­ளுக்கு கடந்த 58 ஆண்­டு­க­ளாக உண­வ­ளித்து வரு­கிறது.

1961ஆம் ஆண்டு ஐக்­கிய நாடு அவை நிறு­விய இது உல­கின் ஆகப் பெரிய மனி­தா­பி­மான அமைப்­பாக தொடர்ந்து வரு­கிறது. பசி­யின்­மையை­யும் உண­வுப் பாது­காப்­பை­யும் உறுதி செய்­வது இந்த அமைப்­பின் நோக்­கம். கடந்த ஆண்டு மட்­டும் பசி, பட்­டி­னி­யால் திண்­டா­டும் மக்­க­ளைக் கொண்ட 88 நாடு­களில் சுமார் 100 மில்­லி­யன் மக்­க­ளுக்கு இந்த அமைப்பு உத­விக்­க­ரம் நீட்­டி­யது.

உல­க­ள­வில் மருத்­து­வம், இயற்­பி­யல், வேதி­யி­யல், பொரு­ளி­யல், இலக்­கி­யம், அமைதி ஆகிய துறை­களில் மிகச்­சி­றப்­பாக பணி­யாற்றி சாதனை படைத்­த­வர்­க­ளுக்கு ஆண்­டு­தோ­றும் நோபெல் பரிசு வழங்கி சிறப்­பிக்­கப்­ப­டு­கிறது. இவ்­வாண்­டுக்­கான நோபெல் பரி­சு­கள் துறை­வா­ரி­யாக அறி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. இலக்­கி­யத்­திற்­கான பரிசு நேற்று முன்­தி­னம் அறி­விக்­கப்­பட்­டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!