வைரங்கள், முத்துகள் பதித்து வகைவகையான முகக்கவசங்கள்; 1 மில்லியன் ஜப்பானிய யென் விலையில்

வைரங்கள், முத்துகள் பதித்த அசத்தலான முகக்கவசங்களை அணிந்து வலம் வரத் தொடங்கியுள்ளனர் ஜப்பானிய நாகரிக விரும்பிகள்.

அந்த முகக்கவசங்களின் விலை ஒரு மில்லியன் ஜப்பானிய யென் (S$12,849) வரை இருப்பதாகக் கூறப்படுகிறது.

Cox Co’s Mask.com நிறுவனம் கைகளால் செய்யப்பட்ட இத்தகைய முகக்கவசங்களைக் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. நாகரிகப் பொருட்களின் விற்பனை மந்தமாகியுள்ள நிலையில் விற்பனையைப் பெருக்க அந்த நிறுவனம் புதிய உத்தியைக் கைக்கொண்டுள்ளது.

வைர முகக்கவசங்களில் 300க்கும் அதிகமான ஸ்வரோவ்ஸ்கி வைரக் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பதிக்கப்பட்ட வைரங்கள் ஒவ்வொன்றும் 0.7 காரட் மதிப்பிலானவை.

முத்து முகக்கவசத்தில் சுமார் 330 ஜப்பானிய அகோயா முத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இணையம் வழியாகவும் ஆறு இடங்களில் உள்ள கடைகளிலும் 200க்கும் அதிகமான வகைகளில் இத்தகைய முகக்கவசங்களை விற்பனை செய்து வருகின்றன. இத்தகைய முகக்கவசங்களின் தொடக்க விலை 500 யென்.

இஸ்ரேலி நகை வடிவமைப்பாளர் ஒருவர் 250 கிராம் எடையில் 18 காரட் தங்கத்தைக் கொண்டு செய்துள்ள முகக்கவசத்தின் விலை US$1.5 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!