(காணொளி) யானைக்குட்டிக்கு சிபிஆர் செய்து இதய செயல்பாட்டை மீட்ட ஆடவர்

மீட்புப் பணியாளர் என்ற முறையில் பலமுறை இதய மீட்பு சிகிச்சையை (சிபிஆர்) மேற்கொண்டிருந்தாலும் ஒரு யானைக்கு இதய மீட்பு சிகிச்சை மேற்கொண்டது தாய்லாந்தின் 26 வயது மனா ஸ்ரீவேதிக்கு இது முதல் முறை.

சமூக ஊடகங்களில் வெகுவாகப் பரவிய காணொளி ஒன்றில் ஆடவர் ஒருவர் யானைக்குட்டிக்கு சிபிஆர் சிகிச்சை செய்வதையும் சற்றுத் தொலைவில் அடிபட்ட மோட்டார் சைக்கிளோட்டி ஒருவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதையும் காண முடிந்தது. மோட்டார் சைக்கிளோட்டி, யானைக்குட்டி மோதியதில் விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

யானைக்குட்டிக்கு சிபிஆர் செய்துகொண்டிருந்தபோது சற்றுத் தொலைவில் அதன் தாய் யானையும் மற்ற யானைகளும் தொடர்ந்து கத்தியது பீதியைக் கிளப்பியதாகக் குறிப்பிட்ட மனா, மனித இதயம் எங்கு உள்ளது என்பதன் அடிப்படையிலும் இணையத்தில் தாம் பார்த்த காணொளிகளின் அடிப்படையிலும் யானைக்குட்டியின் இதயம் இருக்கும் இடத்தைத் தோராயமாகக் கணக்கு வைத்து சிபிஆர் செய்ததாகக் குறிப்பிட்டார்.

சற்று நேரத்தில் யானைக்குட்டி அசைந்து, மூச்சுவிடத் தொடங்கியதும் ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டதாகக் குறிப்பிட்டார் அவர்.

சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு யானை மெதுவாக எழுந்தது. பின்னர், மேற்படி சிகிச்சைக்காக வேறோர் இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட யானைக்குட்டியை அதன் தாயுடன் சேர்க்கும் பொருட்டு, பின்னர் விபத்து நடந்த இடத்துக்கு கொண்டுவந்து விடப்பட்டது.

யானைக்குட்டியின் சத்தத்தைக் கேட்டு தாய் யானை அதனைத் தேடி வந்து அழைத்துச் சென்றது.

பலமுறை மனிதர்களுக்கு சிபிஆர் சிகிச்சை செய்த அனுபவம் இருந்தாலும், தாம் சிபிஆர் செய்து கொண்டிருக்கும்போதே இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கி உயிருடன் எழுந்தது இந்த யானைக்குட்டி மட்டுமே என்கிறார் மனா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!