அமெரிக்காவின் முதல் பெண் நிதி அமைச்சர்

அமெ­ரிக்­கா­வில் முதல் முறை­யாக பெண் ஒரு­வர் நிதி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

முன்­னாள் மத்­திய வங்­கி­யின் தலை­வ­ரான ஜெனட் யெலன், 74, நிதி அமைச்­ச­ராக நிய­மிக்க அமெ­ரிக்க செனட் ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. ஆனால் முதல் வாரத்­தி­லேயே அவ­ரது பணி சவா­லாக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கொவிட்-19 நெருக்­க­டி­யி­லி­ருந்து நாட்டை மீட்­டெ­டுக்க அதி­பர் பைட­னின் 1.9 டிரில்­லி­யன் டாலர் மீட்புத் திட்­டத்திற்கு நாடா­ளு­மன்­றத்­தின் ஒப்­பு­த­லைப் பெற வேண்­டும். இதனால் ஜெனட் யெலன் தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டியிருக்கும்.

நேற்று முன்தினம் அமெ­ரிக்க செனட் சபை­யில் ஜெனட் யெலன் நிதி­ய­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­டு ­வதாக துணை அதி­பர் கமலா ஹாரிஸ் அறிவித்ததும் குடி­ய­ர­சுக் கட்­சி­யி­ன­ரும் வர­வேற்­ற­னர்.

செனட் சபை வாக்கெடுப்பில் ஜெனட் யெலன் நிய­ம­னத்­திற்கு ஆத­ர­வாக 84 உறுப்­பி­னர்­களும் எதி­ராக 15 உறுப்­பி­னர்­களும் வாக்­க­ளித்­த­னர்.

உல­கின் தலைசிறந்த பொரு ளியல் வல்லுநர்களில் ஒருவர் ஜெனட் யெலன். பிரபல யேல் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் படித்­த­வர். பல்­வேறு புகழ்­பெற்ற பல்­க­லைக்­க­ழ­கங்­களில் சிறப்­புப் பேரா­சி­ரி­ய­ரா­கவும் பணியாற்றியவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon