ஆங் சான் சூச்சி மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள்

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூச்சி மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவாகியிருப்பதாக அவரது வழக்கறிஞர் இன்று தெரிவித்தார்.

மியன்மார் தலைநகர் நெப்பிடாவில் உள்ள நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில் காணொளி மூலம் திருவாட்டி சூச்சி முன்னிலைப்படுத்தப்பட்டார்.

தமது வழக்கறிஞர்களைச் சந்திக்க அவர் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டது.

மியன்மாரில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அந்நாட்டு ராணுவம் கடந்த மாதம் 1ஆம் தேதியன்று கவிழ்த்தது. திருவாட்டி சூச்சியையும் மற்ற தலைவர்களையும் ராணுவம் தடுப்புக்காவலில் வைத்துள்ளது. அன்றிலிருந்து திருவாட்டி சூச்சியை யாரும் பார்க்கவில்லை.

“திருவாட்டி சூச்சியை நான் காணொளியில் பார்த்தேன். அவர் பார்ப்பதற்கு நலமாக இருக்கிறார்,” என்று திருவாட்டி சூச்சியின் வழக்கறிஞர் மின் மின் சோ தெரிவித்தார்.

ஆறு அலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் மியன்மாருக்குள் கொண்டு வந்ததாக திருவாட்டி சூச்சி மீது முதலில் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் அதன் பிறகு கொரோனா கிருமித்தொற்று விதிமுறைகளை மீறியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

திருவாட்டி சூச்சி மீது பிரிட்டிஷ் காலனித்துவ காலக்கட்டத்தில் நடைமுறையில் இருந்த சட்டத்தின்கீழ் மேலும் ஒரு குற்றச்சாட்டு இன்று பதிவானது. பொதுமக்களிடையே பயம் அல்லது பதற்றத்தை ஏற்படுத்தும் தகவலைப் பரப்பியதாக திருவாட்டி சூச்சி மீது குற்றம் சாட்டப்பட்டது.

தொலைத்தொடர்பு சட்டத்தின்கீழ் திருவாட்டி சூச்சிக்கு எதிரான மேலும் ஒரு குற்றச்சாட்டு பதிவாகியிருப்பதாக மின் மின் சோ கூறினார்.

இந்த வழக்கு விசாரணை இம்மாதம் 15ஆம் தேதியன்று தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!