இந்தோனீசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் நாட்­டி­லேயே ஆகப்­பெ­ரிய எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­தில் நேற்று தீ மூண்­டது.

அர­சாங்­கத்­தின் பெர்­டா­மினா நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான மேற்கு ஜாவா­வில் பலோங்­கா­னில் உள்ள சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­தில் நேற்று அதி­காலை 0.45 மணி­ய­ள­வில் தீ மூண்­டது என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இதில் குறைந்­தது ஐவர் காயம் அடைந்­த­தா­க­வும் சுற்­றி­யி­ருந்த 950க்கும் மேற்­பட்ட குடி­யி­ருப்­பா­ளர்­கள் உட­ன­டி­யாக வெளி­யேற்­றப்­ ப­ட்­ட­தா­க­வும் அவர்­கள் கூறி­னர்.

தீ விபத்­துக்­கான கார­ணம் தெரி­ய­வில்லை.

நேற்று காலை வரை தீ எரி­வதை தொலைக்­காட்­சி­யி­லும் சமூக ஊடங்­களில் வெளி­யான படங்­கள் காட்­டின.

"எனக்கு மூக்­கைத் துளைக்­கும் அள­வுக்கு தீயின் நெடி இருந்­தது," என்று தொலைக்­காட்­சிக்கு பேட்டி அளித்த குடி­யி­ருப்­பா­ளர் ஒரு­வர் கூறி­னார்.

இந்த விபத்­தில் கடு­மை­யான தீக் காயங்­களை அடைந்த ஐவ­ருக்கு மருத்­து­வ­ம­னை­­யில் சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது என்று வட்­டாரப் பேரி­டர் நிர்­வாக அமைப்பு கூறி­யது.

15 பேருக்கு சிறிய தீக்­கா­யங்­கள் ஏற்­பட்­ட­தா­க­வும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்தது.

காயம் அடைந்த அனைவரும் அருகில் இருந்த குடியிருப்பாளர்கள் மற்றும் தீ விபத்து நிகழ்ந்தபோது அவ்வழியாக பயணம் செய்தவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

பலோங்கான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், இந்தோனீ சியாவிலேயே ஆகப்பெரியது. ஜகார்த்தா வட்டாரத்துக்கு இங்கு இருந்துதான் எரிபொருள் மற்றும் பெட்ரோல் விநியோகிக்கப்படுவதால் நாட்டின் முக்கிய எண்ணெய் சுத்தி கரிப்பு நிலையமாகவும் இது இருந்து வருகிறது.

அதிகாரிகள் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!