‘மியன்மார் வன்முறைக்கு முடிவுகட்டுங்கள்’

யங்­கூன்: மியன்­மா­ரில் ராணு­வத்­திற்கு எதி­ராக ஜன­நா­யக ஆத­ர­வா­ளர்­கள் கடந்த இரண்டு மாதங்­க­ளாக நாடு முழு­தும் இர­வு­ப­க­லாக போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

அந்­தப் போராட்­டங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் ராணு­வம் அவர்­கள் மீது ஒடுக்­கு­மு­றை­யைக் கையாண்டு வரு­கிறது. இந்­நி­லை­யில், இதே­போக்கு அங்கு நீடித்­தால் விரை­வில் பெரிய அள­வில் ரத்­தக்­க­ளறி வெடிக்­கும் அபா­யம் உள்­ளது. இது உள்­நாட்­டுப் போருக்கு வழி­வ­குக்­கும். எனவே மியன்­மார் எதிர்­நோக்­கும் நெருக்­க­டி­யைப் போக்க வன்­மு­றைக்கு முடி­வு­கட்ட வேண்­டும் என்று ஐக்­கிய நாடு­கள் சபை வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது.

அத்­து­டன் அந்­நாட்­டின் சிறு­பான்­மை­யி­னத்­த­வ­ரின் ராணு­வ­மான கச்­சின் சுதந்­திர ராணு­வத்­தின் படைக்­கும் மியன்­மார் ராணு­வத்­திற்கும் இடையே நேற்று நடந்த மோத­லில் குறைந்­தது 20 ராணுவ வீரர்­கள் கொல்­லப்­பட்­ட­னர்.

கச்­சின் சுதந்­திர ராணு­வம் என்­னும் படை அங்கு இயங்கி வரும் கிளர்ச்சியாளர் குழுக்களில் சக்திவாய்ந்தவை என்று கூறப்­ப­டு­கிறது. இந்­நி­லை­யில் இன்­னொரு குழு­வான கேரன் இன சிறு­பான்­மை­யி­ன­ரின் படைக்கு எதி­ராக மியன்­மார் ராணு­வம் போராடி வரு­கிறது.

கடந்த புதன்­கி­ழமை நில­வ­ரப்­படி, ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு இது­வரை சுமார் 2,729 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர், மேலும் 536 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­னர் என தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கிறது.

சிறு­பான்­மை­யி­னக் குழுக்­க­ளுக்­கும் ராணு­வத்­தி­ன­ருக்­கும் இடையே நடக்­கும் மோதல் தீவி­ர­ம­டைந்­துள்­ள­தால் அப்­ப­கு­தி­யில் வாழும் ஆயி­ரக்­கணக்­கா­னோர் தாய்­லாந்­துக்கு அடைக்­கலம் நாடிச்­சென்­றுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் மியன்­மா­ரில் பொது­மக்­கள் கொன்று குவிக்­கப்­படு­வது போன்ற வன்­மு­றைக்கு முடி­வு­கட்ட வேண்­டும். அங்கு அமைதி­நி­லவ வழி காண வேண்­டும். அதற்­காக தென்­கி­ழக்­கா­சிய நாடு­க­ளு­டன் ஒருங்­கி­ணைந்து செயல்­பட்டு வரு­வ­தாக தாய்­லாந்­தின் வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­துப் பேசிய தாய்­லாந்து வெளி­யு­றவு அமைச்­சின் பேச்­சா­ளர் டன்னீ சங்­ராட், மியன்­மா­ரில் ராணு­வத்­தி­ன­ரால் கைது­செய்­யப்­பட்­டுள்ள தலை­வர்­களும் ஜன­நா­யக ஆத­ர­வா­ளர்­களும் விடு­விக்­கப்­பட வேண்­டும். அதன்­மூ­லம் மியன்­மா­ரில் வன்­மு­றைக்கு முடிவு கட்டி நிலைத்­தன்­மை­யைக் கொண்டு வர­மு­டி­யும் என்­றும் அவர் கூறி­னார்.

இந்­நி­லை­யில் மியன்­மா­ரில் ராணு­வத்­தி­ன­ரால் ஒடுக்­கப்­பட்டு காய­ம­டை­யும் பொது­மக்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்க முயற்சி செய்த செஞ்­சி­லு­வைச் சங்க ஊழி­யர் ஒரு­வரை ராணு­வம் கைது செய்­துள்­ள­தாக அனைத்­து­லக செஞ்­சி­லு­வைச் சங்க சம்­மே­ள­னம் நேற்று தெரி­வித்­தது. கைது செய்­யப்­பட்ட அந்த ஊழி­யர் அச்­சு­றுத்­தப்­பட்­ட­தா­க­வும் காயம் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தா­க­வும் அந்­தச் சங்­கம் தெரி­வித்­தது.

ராணுவ ஆட்சி தொடங்­கி­ய­தில் இருந்து மியன்­மா­ரில் மனித உரி­மை­கள் கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது என அந்­தச் சங்­கம் வருத்­தம் தெரி­வித்­துள்­ளது.

இது­வ­ரை­யி­லும் 500க்கு மேற்­பட்­டோர் ராணு­வத்­தால் கொன்று குவிக்­கப்­பட்­டுள்­ள­னர். போராட்­டத்­தைக் கட்­டுப்­ப­டுத்த ராணு­வத்­தி­னர் பொது­மக்­கள் மீது ஒடுக்­கு­மு­றை­யைக் கையாள்­வ­தாக அந்த சங்­கம் குற்­றம் சாட்­டி­யது.

மியன்­மா­ரில் இயங்­கும் செஞ்­சி­லு­வைச் சங்­கம், ராணு­வத்­தால் பாதிக்­கப்­பட்ட 2,000க்கு மேற்­பட்­டோ­ருக்கு சிகிச்சை அளித்­த­தா­கக் கூறி­யது.

இந்­நி­லை­யில் யங்­கூ­னில் உள்ள ரூபி மார்ட் கடைத்­தொ­கு­தி­யில் நேற்று அதி­காலை 2.00 மணிக்கு தீப்­பற்றி எரிந்­தது.

கடைத்­தொ­கு­தி­யின் கட்­ட­டம் கொழுந்­து­விட்­டெ­ரி­யும் காணொ­ளிக் காட்சி சமூக ஊட­கங்­களில் பகிர்ந்­து­கொள்­ளப்­பட்­டது. இன்­னொரு சம்­ப­வத்­தில் மயன்­கோன் என்­னும் இடத்­தில் உள்ள ராணு­வத்­திற்­குச் சொந்­த­மான கண்­ட­மார் மொத்த விற்­பனை நிலை­யத்­தி­லும் தீப்­பி­டித்து எரிந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ராணு­வத்­திற்­குச் சொந்­த­மான இந்­தக் கட்­ட­டங்­களில் தீ பற்­றி­ய­தற்­கான கார­ணம் தெரி­ய­வில்லை.

இது தொடர்­பாக இரண்டு பேரை ராணு­வம் கைது­செய்­துள்­ள­தாக உள்­ளூர் தக­வல் சாத­னம் ஒன்று தெரி­வித்­தது.

இந்த இரண்டு தீச்­சம்­ப­வங்­க­ளி­லும் உயிர்ச்­சே­தம் குறித்த விவ­ரம் எது­வும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!