ஜப்பானின் ஒசாகாவில் அவசர நிலை அறிவிப்பு

தோக்­கியோ: ஜப்­பா­னின் ஒசா­கா­வின் மேற்கு வட்­டா­ரத்­தில் கொரோனா தொற்று நான்­கா­வது முறை­யாக அதி­க­ரித்து வரு­கிறது.

அதைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் அங்கு நேற்று அவ­ச­ர­நிலை அறி­விக்­கப்­பட்­டது. அதன்­மூ­லம் கொவிட்-19 அதி­ர­டிக் கட்­டுப்­பா­டு­கள் மேலும் தீவி­ரப்­ப­டுத்­தப்­படும். வேலை நேரம் குறைக்­கப்­ப­டு­வ­தோடு பெரும்­பா­லா­னோர் வீட்­டில் இருந்து பணி­பு­ரிய கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­வர்.

இந்த நக­ரத்­தில் நடை­பெ­று­வ­தாக இருந்த ஒலிம்­பிக் விளை­யாட்டு தொடக்கவிழா தொடர்பான நிகழ்ச்சிகள் ரத்து செய்­யப்­படும் என்று ஒசாகா ஆளு­நர் ஹிரோ­ஃபுமி யோஷி­முரா நேற்று தெரி­வித்­தார்.

கொவிட்-19 அதி­ர­டிக் கட்­டுப்­பா­டு­கள் ஒசாகா மட்­டு­மின்றி அதைச்­சுற்­றி­யுள்ள ஹியோகோ, மியாகி ஆகிய வட்­டா­ரங்­க­ளி­லும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.

இந்­தக் கட்­டுப்­பா­டு­கள் ஏப்­ரல் 5ஆம் தேதி முதல் மே 5ஆம் தேதி வரை ஒரு மாதத்­திற்கு நடப்­பில் இருக்­கும் என்று பொரு­ளி­யல் துறைக்­கான அமைச்­சர் யசு­டோஷிகா நிஷி­முரா தெரி­வித்­தார். இவர் கொவிட்-19 கட்­டுப்­பாட்­டுக் குழு­வின் தலை­வ­ரா­க­வும் பதவி வகிக்­கி­றார்.

இந்த அதி­ர­டிக் கட்­டுப்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக கூடும் பணிக்­கு­ழு­வில் பிர­த­மர் யோஷி­ஹிட் சுகா இறுதி முடிவை எடுப்­பார் என்று கூறப்­ப­டு­கிறது. கடந்த சில நாட்­க­ளாக ஒசாகா நக­ரில் கிரு­மித்­தொற்று அதை­வி­டப் பெரிய நக­ர­மான தோக்­கி­யோ­வைக் காட்­டி­லும் அதி­கம் உள்­ளது. ஒசாகா வட்­டா­ரத்­தில் நேற்று முன்­தி­னம் மட்­டும் 599 புதிய தொற்­று­கள் பதி­வா­கி­யுள்­ளன.

கடந்த ஜன­வரி மாதத் தொடக்­கத்­தில்­தான் ஜப்­பா­னில் ஆக அதி­க­மாக 654 பேர் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர். அப்­போது நாட்­டின் பல பகு­தி­களில் பிர­த­மர் சுகா அவ­ச­ர­கால அறி­விப்பை விடுத்­தார்.

ஒசா­கா­வில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள அதி­ர­டிக் கட்­டுப்­பாட்டை மீறும் நிறு­வ­னங்­க­ளுக்கு 200,000 யென் (S$2,433.40) அப­ரா­தம் விதிக்­கப்­படும்.

அத்­து­டன் குடி­யி­ருப்­பா­ளர்­கள் கரோ­வோக்கே போன்ற கேளிக்கை நட­வ­டிக்­கை­களில் இருந்து வில­கி­யி­ருக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

ஒசா­கா­வில் இரவு கேளிக்கை நட­வ­டிக்­கை­களில் கலந்­து­கொள்­ளும் இளை­யர்­கள் தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வது அதி­க­ரித்து வரு­வ­தாக சட்­ட­மன்ற தலை­மைச் செய­லா­ளர் கட்­சு­னோபு கட்டோ நேற்று தெரி­வித்­தார். பாதிக்­கப்­பட்ட இளை­யர்­கள் அனை­வ­ரும் 20ல் இருந்து 30 வய­தில் உள்­ள­வர்­கள் என்று அவர் கூறி­னார்.

உருமாறிய கொரோனா தொற்றும் அதிகரித்துள்ளது. எனவே கிருமிப்பரவல் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் அச்சம் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!