‘தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாட்டிற்கு பயணம் செய்யலாம்’

வாஷிங்­டன்: தடுப்­பூசி போட்­டுக் கொண்ட அமெ­ரிக்­கர்­கள் சொந்த நாட்­டிற்­குள்­ளும் வெளி­நாட்­டிற்­கும் பய­ணம் செய்­ய­லாம் என்று அமெ­ரிக்க மத்­திய சுகா­தார அதி­கா­ரி­கள் நேற்று அறி­வித்­த­னர்.

அவ்­வாறு பய­ணம் செய்­ப­வர்­கள் முகக்­க­வ­சம் அணி­வது போன்ற அடிப்­படை முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை பின்­பற்­று­வது அவ­சி­யம் என்­றும் அவர்­கள் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.

வெள்ளை மாளி­கை­யில் நடந்த செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் இதை அறி­வித்த நோய் கட்­டுப்­பாடு மற்­றும் தடுப்பு மைய அதி­கா­ரி­கள், இருப்­பி­னும் மக்­கள் பய­ணத்­தைத் தவிர்ப்­ப­தையே தாங்­கள் விரும்­பு­வ­தா­க­வும் கூறி­னர்.

ஆனால் தடுப்­பூ­சி­க­ளின் செயல்­தி­றன் குறித்து சான்­று­கள் அதி­க­ரித்து வரும் வேளை­யில், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள், 'அபா­யம் குறைவு' என்ற ரீதியில் பய­ணம் செய்­ய­லாம் என்­ப­தைக் காட்­டு­வ­தா­க­வும் அவர்­கள் கூறினர்.

இது­வரை சுமார் 100 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட அமெ­ரிக்­கர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்­கா­வில் தடுப்­பூசி போடும் பணி வேக­மெ­டுத்து வரும் நிலை­யில், அங்கு கிரு­மித்­தொற்று கார­ண­மாக உயி­ரி­ழப்­ப­வர்­கள் எண்­ணிக்கை குறைந்து வரு­கிறது.

அதே சம­யம் புது­வகை கொரோனா தொற்றுப் பர­வல் கார­ண­மாக, அமெ­ரிக்­கா­வின் பல மாநி­லங்­களில் தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை கணி­ச­மாக அதி­க­ரித்து வரு­கின்­றது.

கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று, நோய் கட்­டுப்­பாடு மற்­றும் தடுப்பு மைய இயக்­கு­னர் டாக்­டர் ரோசெல் வெலன்ஸ்கி, மாநி­லங்­களும் நக­ரங்­களும் தொடர்ந்து பொது சுகா­தார கட்­டுப்­பா­டு­களை தளர்த்­தி­னால் நான்­கா­வது அலை ஏற்­ப­டக்­கூ­டும் என்று எச்­ச­ரித்­தார்.

இந்­நி­லை­யில், வெளி­யா­கி­யுள்ள தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்

­க­ளுக்­கான இந்த பயண அறி­விப்பு, மக்­க­ளி­டையே குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தும் என்று சுகா­தார நிபு­ணர்­கள் கவலை தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!