‘மியன்மாருக்கு எதிரான தடைகளால் உள்நாட்டுப் போர் ஏற்படும்’

மாஸ்கோ: மியன்மாருக்கு எதிராக விதிக்கப்படும் தடைகளால் உள்நாட்டுப் போர் ஏற்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

ஆனால் பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியமும் மியன்மாருக்கு எதிரான தடைகளைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளன.

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசாங்கத்தை ராணுவம் கவிழ்த்தது. அப்போது முதல் அந்நாட்டின் மீது உலக நாடுகள் பல்வேறு தடைகளை அறிவித்து வருகின்றன. மியன்மார் மக்களும் ஒவ்வொரு நாளும் ராணுவத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை அன்று முக்கிய நகரமான யங்கூனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளில் சிவப்பு நிற சாயத்தால் 'ரத்தம் இன்னமும் காயவில்லை' உள்ளிட்ட முழக்க வரிகளை எழுதியிருந்தனர்.

ஒரு டஜன் குழந்தைகள் உட்பட 570 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றுவிட்டது.

பாதுகாப்புப் படையினர் 3,500க்கும் மேற்பட்டவர்களை சிறையில் அடைத்துள்ளது.

இந்த நிலையில் மியன்மாருக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானது என்று ரஷ்யா கூறி யுள்ளது. உலக நாடுகளின் தடைகளால் ராணுவம் தன்னுடைய நிலையை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யும். மக்களும் ஆர்ப்பாட்டங்களை தீவிரமாக்குவர். இதனால் உள்நாட்டுப் போர் ஏற்படும் என்று ரஷ்யா தெரிவித்தது.

ஆனால் ராணுவம் ஜனநாய கத்தை நிலைநாட்ட வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தவில்லை.

மியன்மாருக்கு அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று.

கடந்த மாதம் நேப்பிடாவில் ஆட்சியைக் கவிழ்த்த ராணுவத் தளபதி ஜெனரல் மின் அவுங் ஹிலைங்கை ரஷ்ய துணை தற்காப்பு அமைச்சர் சந்தித்தார்.

இது, ராணுவ ஆட்சியை அங்கீ கரிப்பது போல் உள்ளது என்று ரஷ்யாவை என்று உலக நாடுகள் சாடியுள்ளன.

இதற்கிடையே வர்த்தக நகர மான யங்கூனில் உள்ள சீனாவுக்குச் சொந்தமான தொழிற்சாலையை தீயிட்டுக் கொளுத்தி சீனாவின் கொடியை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தனர்.

இதனால் அங்கு வந்த ராணுவம் துப்பாக்கியால் சுட்டதில் ஏழு பேருக்கு மேல் மாண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!