நஜிப் ‘நொடித்துப்போனவர்’ ஆக அறிவிக்கக் கோரிக்கை

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­த­மர் நஜிப் ரசாக் பல்­வேறு வழக்­கு­களில் பின்­ன­டை­வு­க­ளைச் சந்­தித்து வரும் வேளை­யில் அவ­ருக்கு எதி­ராக வரு­மான வரித்­துறை அதி­ரடி நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

திரு நஜிப்பை நொடித்­துப் போன­வ­ராக அறி­விக்க வேண்­டும் என்று உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

இதன் தொடர்­பில் தமக்கு கடி­தம் வந்­துள்­ள­தாக திரு நஜிப் ரசாக் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

சுமார் 1.74 பில்­லி­யன் ரிங்­கிட் (S$564 மில்­லி­யன்) வரி­யைக் கட்­ட­வில்லை என்று அவ­ருக்கு அனுப்­பிய கடி­தத்­தில் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

தன் மீது கொடூ­ர­மான வரி விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அதற்கு­தகுந்த கார­ணமும் இல்லை என்றும் திரு நஜிப் கூறி­யுள்­ளார்.

வரு­மான வரித் துறை­யின் நட­வ­டிக்­கைக்கு இடைக்­கா­லத் தடை விதிக்­கும் மனு­வைத் தாக்­கல் செய்ய அவர் முடிவு செய்­துள்­ளார்.

"உண்­மையை அடிப்­ப­டை­யாக வைத்து நீதி­ப­தி­கள் நியா­ய­மான முடிவை எடுக்க என்­னு­டைய வழக்­கறி­ஞர்­க­ளு­டன் சேர்ந்து முழு ஆற்­ற­லைப் பயன்­ப­டுத்தி சிறந்த வகை­யில் மேல்­மு­றை­யீடு செய்­வேன்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

தன்­னு­டைய பெய­ரில் உள்ள வங்­கிக் கணக்­கில் மூன்று பில்­லி­யன் ரிங்­கிட் முத­லீடு செய்­யப்­பட்ட விவ­கா­ரம் தொடர்­பில் பேசிய திரு நஜிப், சமூ­கப் பொறுப்­பு­க­ளுக்­கும் அர­சி­யல் நோக்­கத்துக்காகவும் நன்கொடை பெறு­வ­தற்­காக அந்தக் கணக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்­றார்.

1எம்­டி­பி­யின் மில்­லி­யன் கணக்­கான நிதியைக் கையா­டிய வழக்­கில் குற்­ற­வாளி எனத் தீர்ப்பு அளிக்­கப்­பட்­ட­தற்கு எதி­ராக நஜிப் மேல்­மு­றை­யீடு செய்யவிருக்கிறார்.

இவ்­வே­ளை­யில் வரு­மான வரித் துறை­யின் நட­வ­டிக்கை அவர் மீது பாய்ந்­துள்­ளது.

கடந்த 2020ஆம் ஆண்­டில் 1.69 பில்­லி­யன் ரிங்­கிட்டை வரி­யாக செலுத்த வேண்­டும் என்று நஜிப்­புக்கு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது. ஆனால் இதனை அவர் மறுத்­துள்­ளார்.

"தான் நொடித்­துப்போன­வ­ராக அறி­விக்­கப்­பட்­டால் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வியை இழக்க நேரி­டும். கட்­சித் தேர்­த­லி­லும் தேசிய தேர்­த­லி­லும் போட்­டி­யி­டும் தகு­தியை இழக்க நேரி­டும்," என்­று அவர் மேலும் சொன்­னார்.

ஆளும் கூட்­ட­ணி­யில் அவ­ரது அம்னோ கட்சி அங்­கம் வகித்­தா­லும் அர­சாங்­கத்தை திரு நஜிப் தொடர்ந்து விமர்­சித்து வரு­கி­றார்.

அம்னோ கட்­சி­யும் நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்ட பிறகு பிர­த­மர் முகை­தீ­னுக்கு அளித்து வரும் ஆத­ரவை விலக்­கிக்கொள்­ளப் போவ­தாக அறி­வித்­துள்­ளது. இத­னால் ஆளும் கட்­சிக்­கும் அம்­னோ­வுக்­கும் இடையே உறவு மோசமடைந்து உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!