ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய போராளி அமைப்பு

யங்­கூன்: மியன்­மா­ரின் ராணுவ ஹெலி­காப்­டரை நேற்று சுட்டு வீழ்த்­தி­ய­தற்கு தி கச்­சின் இண்­டி­பென்­டன்ஸ் ஆர்மி (கேஐஏ) எனும் போரா­ளிக் குழு பொறுப்­பேற்­றுள்­ளது. நேற்று முன்­தி­னம் போராட்­டக்­கா­ரர்­கள் மீது ராணு­வம் தாக்­குதல் நடத்தியதில் பொது­மக்­கள் ஐவர் உயி­ரி­ழந்­த­னர்.

நேற்று மொமு­வாக் நக­ருக்கு அரு­கில் கடு­மை­யான சண்டை நடந்­து­கொண்­டி­ருந்­த­போது ஹெலி­காப்­டர் சுட்டு வீழ்த்­தப்­பட்­ட­தாக கேஐஏ அமைப்பு தெரி­வித்­தது.

இவ்­வாண்டு பிப்­ர­வரி முதல் தேதி அங்கு ஆட்­சியை ராணு­வம் கைப்­பற்­றி­யது முதல் ஜன­நா­யக ஆத­ரவு போராட்­டக்­கா­ரர்­கள் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்டு வரும் நிலை­யில், இனப் போராளி குழுக்­க­ளு­டன் நீண்­ட­கா­ல­மாக கனன்­று­கொண்­டி­ருந்த பிரச்­சி­னை­கள் பெரிய சண்­டை­யாக உரு­வெ­டுத்­துள்­ளன.

வடக்கு கச்­சின் மாநி­லத்­தில் ராணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக கடந்த பத்­தாண்­டு­க­ளுக்­கும் மேலாக கிளர்ச்சி செய்­யும் கேஐஏ அமைப்­பின் மீது அண்­மைய வாரங்­களில் ஆகா­யத் தாக்­கு­தல்­களை ராணு­வம் நடத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

"இன்று காலை 8 மணி முதல் எங்­க­ளது வீரர்­கள் மீது ஜெட் போர்­வி­மா­னம், ஹெலி­காப்­டர் ஆகி­ய­வற்­றின் மூலம் கடும் தாக்­கு­தலை ராணு­வம் நிகழ்த்­தி­யது. எங்­க­ளது வீரர்­கள் எதிர்த் தாக்­கு­தல் நடத்­தி­ய­போது ஹெலி­காப்­டர் சுட்டு வீழ்த்­தப்­பட்­டது," என நேற்று கேஐஏ அமைப்­பின் பேச்­சா­ளர் கலோ­னல் நவ் பு தெரி­வித்­தார். ராணு­வத் தரப்­பில் பதி­லே­தும் அளிக்­கப்­ப­ட­வில்லை என ஏஎ­ஃப்பி கூறி­யது.

ராணு­வத்­திற்கு எதி­ரான போராட்­டத்­தில் தப்­பி­யோ­டும் ஜன­நா­யக ஆத­ரவு ஆர்­வ­லர்­க­ளுக்கு தங்க இட­ம­ளிப்­பது, பயிற்சி அளிப்­பது போன்ற நட­வ­டிக்­கை­களில் மியன்­மா­ரின் இனப் போராளி குழுக்­கள் பல முன்­வந்­துள்­ளன.

நேற்று முன்­தி­னம் போராட்­டக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ராக ராணு­வம் தாக்­கு­தல் நடத்­தி­ய­தில் ஐவர் உயி­ரி­ழந்­த­தா­க­வும் ஆசி­யான் கூட்­டம் அண்­மை­யில் நடத்­தப்­பட்­ட­தற்­குப் பிறகு அதிக எண்­ணிக்­கை­யி­லா­னோர் ஞாயிற்­றுக்­கி­ழமை பலி­யா­கி­னர் என­வும் அர­சி­யல் கைதி­

க­ளுக்­கான உதவி அமைப்பு தெரி­வித்­தது.

அனைத்­து­லக பத்­தி­ரிகை சுதந்­திர தின­மான நேற்று மியன்­மா­ரில் உள்ள வெளி­நாட்­டுத் தூத­ர­கக் குழுக்­கள் சில, செய்­தி­யா­ளர்­களை மியன்­மா­ரின் ராணு­வம் நடத்­தும் முறை பற்­றிக் கண்­ட­னம் தெரி­வித்­த­ன.

கைதா­கி­யி­ருக்­கும் செய்­தி­

யா­ளர்­களை விடு­விக்­கும்­ப­டி­யும் இணை­யம், தக­வல் தொடர்பு தடை­க­ளைத் தளர்த்­தும்­ப­டி­யும் அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றி­யம், ஆஸ்­தி­ரே­லியா, பிரிட்­டன், பிரான்ஸ், ஜெர்­மனி ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த பேரா­ளர்­கள் வெளி­யிட்ட அறிக்கை கேட்­டுக்­கொண்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!