‘பி1617’ உருமாறிய கொரோனா இந்தோனீசியாவிலும் பரவல்

தைப்பே: இந்­தி­யா­வில் கடந்த 14 நாள்­க­ளுக்­குள் தங்கி, வரும் பய­ணி­க­ளுக்கு இன்று முதல் தைவான் தடை விதித்­துள்­ள­தாக அந்­நாட்டு சுகா­தார அமைச்­சர் சென் ஷி சங் கூறி­யுள்­ளார். இந்­தி­யா­விலிருந்து வரும் தைவான் குடி­மக்­க­ளுக்கு இந்­தத் தடை இல்லை.

இந்­தி­யா­வி­லி­ருந்து தைவா­னுக்கு வரும் தைவான் குடி­மக்­கள் 14 நாட்­க­ளுக்­குத் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வர். இந்­தி­யா­வில் வசிக்­கும் தைவான் நாட்­ட­வர்­கள் 150 பேரை அழைத்து வர விமா­னம் அனுப்­பு­வது குறித்து ஆலோ­சிக்­கப்­பட்ட நிலை­யில், வேறு எந்த நாடும் அத்­த­கைய நட­வ­டிக்கை எடுக்­கா­த­தால், அதற்கு இப்­போது தேவை ஏற்­ப­ட­வில்லை என தைவான் வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­தது.

இந்­தி­யா­வில் காணப்­படும் உரு­மா­றிய கொரோனா கிருமி பிரிட்­டன், ஈரான், சுவிட்­சர்­லாந்து உட்­பட 17 நாடு­களில் பரவி இருப்­ப­தா­கக் கூற­ப்படும் வேளை­யில், இந்­தி­யா­வி­லி­ருந்து வரும் பய­ணி­க­ளுக்குப் பல நாடு­கள் தடை விதித்து வரு­கின்­றன.

இந்­தி­யா­வில் முத­லில் கண்­ட­றி­யப்­பட்ட, அதி­வி­ரை­வா­கப் பர­வும் தன்­மை­யு­டைய ‘பி1617’ ரக கொரோனா கிருமி இந்­தோ­னீ­சி­யா­வில் இரு­வ­ருக்­குத் தொற்­றி­யி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக இந்­தோ­னீ­சிய சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது. முத­லில் தென்­னாப்­பி­ரிக்­கா­வில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட உரு­மா­றிய கொரோனா கிரு­மிப் பர­வ­லும் பாலி­யில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வி­லி­ருக்­கும் ஆஸ்­தி­ரே­லி­யர்­கள் சொந்த நாட்­டுக்­குத் திரும்ப வேண்­டாம் என­வும் அவ்­வாறு திரும்­பி­னால் அவர்­க­ளுக்கு 50,000 அமெ­ரிக்க டாலர்­கள் வரை (S$66,600) அப­ரா­த­மும் ஐந்­தாண்­டு­கள் வரை சிறைத் தண்­ட­னை­யும் விதிக்­கப்­படும் என ஆஸ்­தி­ரே­லியா அறி­வித்­தி­ருப்­ப­தற்கு மனித உரி­மை­அமைப்­பு­கள் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளன.

ஆனால், ஆஸ்­தி­ரே­லி­யர்­க­ளின் சுகா­தார நலன்­க­ளைக் கருத்­தில் கொண்டு சுகா­தார அமைச்­சின் ஆலோ­ச­னை­ப்படியே இந்­தத் தடை விதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் தற்­காத்­துப் பேசி­யுள்­ளார்.

உள்­ளூ­ரில் கிரு­மிப் பர­வலை வெகு­வா­கக் கட்­டுப்­ப­டுத்­தி­யுள்ள ஆஸ்­தி­ரே­லியா, கடந்த செவ்­வாய்க்­கி­ழமை முதல் இந்­தி­யா­வி­லி­ருந்து வரு­வோ­ருக்­குத் தடை விதித்த அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து, பிரான்ஸ், கனடா ஆகிய நாடு­க­ளைப்­போல தாமும் தடை­வி­தித்­தது.

ஆனால், சனிக்­கி­ழமை ஒரு­படி மேலே சென்று, ஆஸ்­தி­ரே­லி­யக் குடி­மக்­கள் இந்­தி­யா­வி­லி­ருந்து சொந்த நாட்­டுக்­குத் திரும்­ப­வும் தடை விதித்­தது.

இந்­தி­யா­வில் தொடர்ந்து 12வது நாளாக நேற்று 300,000க்கும் அதி­க­மா­னோ­ருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்ட நிலை­யில் அங்கு கிருமி தொற்­றி­யோ­ரின் எண்­ணிக்கை 20 மில்­லி­ய­னைக் கடந்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!