ஜி-7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பிரிட்டனில் சந்திப்பு

லண்­டன்: ஜி-7 நாடு­க­ளின் வெளி­யு­றவு அமைச்­சர்­கள் நேற்று லண்­ட­னில் நடை­பெற்ற கூட்­டத்­தில் நேர­டி­யா­கப் பங்­கேற்­ற­னர். கொரோனா தொற்­றுப் பர­வ­லுக்­குப் பிறகு ஜி-7 நாடு­க­ளின் பிர­தி­நி­தி­ கள் பங்­கேற்­கும் முதல் நேரடிக் கூட்­டம் இது.

அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஆன்­டனி பிளிங்­க­னு­ட­னான உரை­யா­ட­லு­டன் நிகழ்ச்­சி­யைத் தொடங்கி வைத்­தார் பிரிட்­டிஷ் வெளி­யு­றவு அமைச்­சர் டோமி­னிக் ராப்.

அடுத்த மாதம் பிரிட்­ட­னில் நடை­பெ­ற­வுள்ள ஜி-7 உச்­சி­நிலை மாநாட்­டில் அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கலந்­து­கொள்­வது தொடர்­பாக இந்­தக் கூட்­டத்­தில் முன்னேற்பாடுகள் இடம்பெறும்.

ஜி-7 உறுப்பு நாடு­க­ளான கனடா, பிரான்ஸ், ஜெர்­மனி, இத்­தாலி, ஜப்­பான், அமெ­ரிக்கா, பிரிட்­டன் ஆகி­யவை ஆஸ்­தி­ரே­லியா, இந்­தியா, தென்­னாப்­பி­ரிக்கா, தென்­கொ­ரியா ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த அமைச்­சர்­க­ளுக்­கும் அழைப்பு விடுத்­தி­ருந்­தன. நேற்று மாலை முதல் இந்­தச் சந்­திப்­பு­கள் தொடங்­கும் எனக் கூறப்பட்டது.

அதற்கு முன்பு அமெ­ரிக்க, பிரிட்­டிஷ் வெளி­யு­றவு அமைச்­சர்­கள் பொது­வான இலக்­கு­கள் பற்றி விவா­திப்­பார்­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

ஈரா­னு­ட­னான அணு­வா­யு­தம் தொடர்­பான பேச்­சு­வார்த்தை, பரு­வ­நிலை மாற்­றத்­திற்கு எதி­ரான போரில் மேற்­கொள்­ளப்­படும் அனைத்­து­லக முயற்­சி­களில் பங்­கெ­டுப்­ப­தன் தொடர்­பி­லான திரு பைட­னின் விருப்­பம் ஆகியவற்றின் மீது பிரிட்­டன் விருப்­பம் கொண்­டுள்­ளது. பிரிட்­டன், அமெ­ரிக்கா நாடு­க­ளுக்கு இடை­யி­லான வர்த்­த­கப் பேச்­சு­வார்த்­தை­க­ளை­யும் இரு நாட்டு அமைச்­சர்­கள் மேற்­கொள்­வர் என்றும் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!