ஆறு மாவட்டங்களில் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

கோலா­லம்­பூர்: மக்­கள் நெருக்­கம் அதி­க­மாக உள்ள சிலாங்­கூர் மாநி­லத்­தின் ஒன்­ப­தில் ஆறு மாவட்­டங்­களில் முதல் அடுக்கு நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை நாளை முதல் 12 நாட்­க­ளுக்கு நடப்­புக்கு வரு­கிறது. கொவிட்-19 தொற்று எண்­ணிக்கை அதி­க­ரித்­தா­லும் பர­வ­லான பொது­மு­டக்­கம் இருக்­காது என்­பதை நேற்று இரண்டு அமைச்­சர்­கள் கோடிட்­டுக் காட்­டி­னர்.

பர­வ­லான பொது­மு­டக்­கம் இருக்­காது என தற்­காப்பு அமைச்­சர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளார் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

பெட்­டா­லிங், ஹுலு லங்­காட், கோம்­பாக், கிள்­ளான், கோலா லங்­காட், செபாங் ஆகிய மாவட்­டங்­களில் முழு நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை நடப்­புக்கு வரு­கிறது என்று அவர் தெரி­வித்­தார்.

இந்த மாவட்­டங்­க­ளுக்கு இடை­யிலான போக்­கு­வ­ரத்­தும் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. மலே­சி­யா­வில் மாநி­லங்­க­ளுக்கு இடை­யிலான போக்­கு­வ­ரத்துக்குத் தடை விதிக்கப் பட்டிருப்பது குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த இரண்டு நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை­கள் நடப்­பில் இருந்­த­போது வேலை­யி­ழப்­பு­கள் ஏற்­பட்டு பொரு­ளி­யல் பெரி­தும் பாதிப்­புக்கு உள்­ளா­ன­தில் இருந்து பாடம் கற்­றுக்­கொண்டு, வர்த்­தக நட­வ­டிக்­கை­கள் இந்த ஆறு மாவட்­டங்­க­ளி­லும் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால், வர்த்­த­கச் செயல்­பாட்டு நேரம் குறைக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த மாத மத்­தி­யி­லி­ருந்து தின­சரி கொவிட்-19 தொற்று எண்­ணிக்கை 2,000க்கு மேல் பதி­வாகி வரு­வதை அடுத்து அர­சாங்­கம் இந்த நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ளது.

கடந்த 7 நாள்­களில் ஐந்து நாள்­க­ள் தொற்று எண்­ணிக்கை 3,000க்கும் மேல் பதி­வா­கி­யுள்­ளது. நேற்று மலே­சி­யா­வில் 3.120 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

தொற்று அதி­கம் உள்ள இடங்­களை அடை­யா­ளம் காண ‘ஹைட்’ எனப்­படும் தர­வு­க­ளின் அடிப்

­ப­டை­யி­லான அடை­யா­ளம் காணும் முறை நடப்­புக்கு வரு­வ­தாக மற்­றொரு செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய அறி­வி­யல், தொழில்­நுட்­ப, புத்­தாக்க அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் தெரி­வித்­தார். தொற்று அதி­கம் காணப்­படும் இடங்­க­ளின் பட்­டி­யலை வெளி­யிட்­டால் பொது­மக்­கள் உரிய பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை எடுக்க உத­வி­யாக இருக்­கும் என்­றார் அவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!