மலேசியா: மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய தடை

மலேசியா,  நாளை முதல் மாநிலங்களுக்கும் வட்டாரங்களுக்கும் இடையிலான பயணங்களுக்குத்  தடை விதிக்கவுள்ளது.  அத்துடன் இன்றிலிருந்து மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சில இடங்களின் இயக்கத்திற்கும் தடை செய்யதுள்ளது.  இந்தத் தடை மே 10 ஆம் தேதி முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.

அந்நாட்டில் அண்மையில் திடீரென அதிகரித்து வந்துள்ள  கிருமித்தொற்றைச் சமாளிக்க மலேசியாவின் சுகாதாரக் கட்டமைப்பு திணறி வரும் நேரத்தில் இந்தக் கட்டுப்பாடு மறுபடியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலும் வட்டாரங்களுக்கு இடையிலும் செய்யப்படும் பயணங்களுக்கு இனி போலிசாரின் அனுமதி தேவைப்படும் என்று பாதுகாப்புக்கான மூத்த அமைச்சர் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

இதுபோன்ற கட்டுப்பாடுகள் சென்ற முறை கடந்தாண்டு மார்ச் மாதத்தின்போது அறிமுகம் செய்யப்பட்டது.  நேற்றைய நிலவரப்படி 36, 564 கொவிட்-19 நோயாளிகள் மலேசியாவில் உள்ளனர். இவர்களில் 393 பேர் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளனர்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!