மலேசியாவில் பயணக் கட்டுப்பாடு

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கத்­தில் மாநி­லங்­க­ளுக்கு இடை­யி­லான, மாவட்­டங்­க­ளுக்கு இடை­யி­லான பய­ணங்­கள் போலிஸ் அனு­மதி இருந்­தா­லொ­ழிய அனு­ம­திக்­கப்­ப­டாது.

இந்­தக் கட்­டுப்­பாடு மே 10 முதல் ஜூன் 6 வரை நடப்­பில் இருக்­கும் என்று மூத்த தற்­காப்பு அமைச்­சர் இஸ்­மா­யில் சாப்ரி யாக்­கோப் அறி­வித்­தார்.

இந்­தக் கால­கட்­டத்­தில் மக்­கள் ஒன்­று­கூட வகை செய்­யும் அனைத்து சமூக, கல்வி, பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் அனு­மதி இராது என்­றும் சனிக்­கி­ழமை வெளி­யி­டப்­பட்ட அறிக்கை ஒன்­றில் அவர் தெரி­வித்­தார்.

அர­சாங்­கம் மற்­றும் தனி­யார் துறை நடத்­தும் அதி­கா­ர­பூர்வ, சமூக நிகழ்ச்­சி­கள் அனைத்­திற்­கும் ஜூன் 6 வரை அனு­மதி இருக்­காது என்­றும் திரு இஸ்­மா­யில் குறிப்­பிட்­டார்.

இதற்கிடையே, இந்த முடிவு இரண்டு வாரங்­க­ளுக்­குப் பின் மறு­ப­ரி­சீ­லனை செய்­யப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

அதோடு பெரிய கடைத்­தொ­கு­தி­கள் உள்­ளிட்ட கிரு­மித்­தொற்று ஆபத்து அதி­கம் உள்ள கட்­ட­டங்­களும் மூடப்­பட்டு இருக்­கும் என்­றும் அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

மலே­சி­யா­வில் சென்ற ஆண்டு மார்ச் மாதத்­திற்­குப் பிறகு நாட­ளா­விய முறை­யில் மாவட்­டங்­க­ளுக்கு இடை­யி­லான பய­ணக் கட்­டுப்­பா­டும் ஒன்று கூடு­வ­தற்­குத் தடை­யும் விதிக்­கப்­பட்­ட பிறகு, இப்­போ­து­தான் மீண்­டும் நடை­மு­றைப் படுத்­தப்­பட்­டுள்­ளது.

நாட்­டில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்டு இருக்­கும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை சாதனை அள­வா­கக் கூடி வரு­கிறது. மலே­சி­யா­வின் சில மருத்­துவமனை­களும் தீவிர கண்­கா­ணிப்­புப் பிரி­வு­களும் நிரம்பி வரு­கின்­றன.

அங்கு நேற்று 3,733 புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின. கடந்த இரண்டு நாட்­க­ளாக 4,000க்­கும் மேற்பட்ட கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வான நிலை­யில், நேற்று அந்த எண்­ணிக்கை சற்று குறைந்­தி­ருந்­தது.

தொடர்ந்து சிலாங்­கூ­ரில் ஆக அதிக எண்­ணிக்­கை­யில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­கின்­றன.

அங்கு நேற்று ஒரே நாளில் 1,278 சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. அதற்கு அடுத்த இடங்­களில் சர­வாக்­கும் (454) ஜோகூ­ரும் (365) உள்­ளன.

இதை­ய­டுத்து அங்கு கொவிட்-19 நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை 440,677 ஆனது.

நாட்­டில் கொவிட்-19 பர­வ­லைத் தடுப்­ப­தற்­கான தன்­னு­டைய சுகா­தார நடை­முறை நிபந்­த­னை­களை அர­சாங்­கம் எப்­போ­துமே மறு­பரி

சீலனை செய்து வரு­வ­தா­க­வும் தொற்று அதி­க­ரிக்­கு­மா­னால் அந்த நிபந்­த­னை­கள் கடு­மை­யாக்­கப்­ப­ட­லாம் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

புதிய உரு­மா­றிய கிருமி தலை­யெ­டுப்­ப­தால் சூழ்­நிலை கவலை தரு­வ­தாக மாறி வரு­கிறது. இதைக் கருத்­தில் கொண்டே அர­சாங்க நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­று­வ­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!