காபூல் கார் குண்டுவெடிப்பு: 55 பேர் பலி

காபூல்: மேற்கு காபூ­லில் உள்ள பெண்­கள் பள்ளிக்கு அருகே நடந்த குண்டுவெடிப்பில் மாண­வி­கள் உட்­பட 55 பேர் கொல்­லப்­பட்­ட­னர். 150க்கும் அதி­க­மா­னோர் காய­ம­டைந்­த­னர்.

இந்த கொடூர குண்­டு­வெ­டிப்பு தாக்­கு­த­லுக்கு தலி­பான்­களே கார­ணம் என்ற ஆப்­கா­னிஸ்­தான் அதி­பர் அஷ்­ரப் கனி­யின் குற்­றச்­சாட்டை அந்த தீவி­ர­வாத அமைப்பு மறுத்­துள்­ளது. ஆனால் வேறு எந்த தீவி­ர­வாத அமைப்­பும் இதற்கு பொறுப்­பேற்­க­வில்லை.

ஆப்­கா­னிஸ்­தா­னில் உள்ள அமெ­ரிக்க படை­கள் அனைத்­தை­யும் செப்­டம்­பர் 11ஆம் தேதிக்­குள் வெளி­யேற்ற திட்­ட­மிட்­டி­ருப்­ப­தாக அமெ­ரிக்கா அறி­வித்த ஒரு வாரத்­திற்­குள் இந்த கார் குண்­டு­வெ­டிப்பு நிகழ்ந்­துள்­ளது.

அமெ­ரிக்கா தன்­னு­டைய படை

களைத் திரும்ப பெறு­வ­தாக அறி­வித்­த­தி­லி­ருந்­ததே, தலி­பான்­ போரா

ளிக­ளுக்­கும் ஆப்­கா­ன் அர­சாங்­கத்­திற்­கும் இடையே மோதல் அதி­க­ரித்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லை­யில் நிகழ்ந்த இந்த குண்­டு­வெ­டிப்­புக்கு கண்­ட­னம் தெரி­வித்­துள்ள அமெ­ரிக்கா, "அப்­பா­வி­க­ளைக் குறி வைத்து நடத்­தப்­படும் அர்த்­த­மற்ற தாக்­கு­தல்­கள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்­டும்," என்று கூறி­யுள்­ளது.

பள்ளி முடிந்து மாண­வி­கள் வீடு திரும்­பும் நேரத்­தில் நேற்று முன்­தி­னம் நடந்த கார் குண்­டு­வெ­டிப்­பில் சுமார் 8 பள்ளி மாண­வி­கள் உயி­ரி­ழந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று கூறப்­ப­டு­கிறது. மாண­வி­கள் உட்­பட சுமார் 58 பேர் மாண்­ட­னர்.

கார் குண்­டு­வெ­டிப்­பைத் தொடர்ந்து மேலும் இரண்டு முறை வெடிப்பு சத்­தம் கேட்­ட­தாக சம்­ப­வத்தை நேரில் கண்ட சிலர் கூறி­ய­தாக பிபிசி செய்தி தெரி­விக்­கிறது.

மாண்­ட­வர்­க­ளின் சட­லங்­கள் நேற்று அடக்­கம் செய்­யப்­பட்­டா­லும், பலர் காணா­மற்­போன தங்­க­ளது உற­வி­னர்­க­ளைத் தேடிக் கொண்­டி­ருந்­த­னர். காய­ம­டைந்­த­வர்­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்க முடி­யா­மல் மருத்­து­வ­ம­னை­களும் திண­று­வ­தாக தக­வல்­கள் கூறு­கின்­றன.

வன்­முறை, போருக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கத் தவ­றி­விட்­ட­தாக ஆப்­கா­னிய அர­சாங்­கத்­தை­யும் மேற்

கத்­திய சக்­தி­க­ளை­யும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் குடும்­பங்­கள் சாடி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!