மலேசியாவில் நாடுதழுவிய முடக்கநிலை பிரகடனம்

கோலா­லம்­பூர்: கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை வெகு­வாக அதி­க­ரித்து வரு­வ­தால் நாடு­த­ழுவிய முடக்­க­நி­லையை பிர­க­ட­னம் செய்ய அந்­நாட்டு அர­சாங்­கம் முடி­வெ­டுத்­துள்­ளது.

மலே­சியா முழு­வ­தி­லும் நாளை முதல் வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி வரை நட­மாட்­டக் கட்­டுப்­பாடு உத்­த­ரவு நடப்­பில் இருக்­கும் என்று மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீன் யாசின் நேற்று அறி­வித்­தார்.

மலே­சி­யா­வில் கொரோனா தலை­தூக்­கி­ய­தி­லி­ருந்து நட­மாட்­டக் கட்­டுப்­பாடு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருப்­பது இதுவே மூன்­றா­வது முறை­யா­கும்.

தற்­போது விதிக்­கப்­படும் நட­மாட்­டக் கட்­டுப்­பாடு உத்­த­ரவு மிகக் கடு­மை­யா­ன­தாக இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இருப்­பி­னும், பொரு­ளி­யல் தொடர்­பான நட­வ­டிக்கைகள் தொடர்ந்து செயல்­படும் என்­றார் திரு முகை­தீன்.

ஆனால் சமூக நட­வ­டிக்­கை­கள், நிகழ்ச்­சி­கள், உண­வ­கங்­களில் சாப்­பி­டு­வது, மாவட்­டங்­கள் மற்­றும் மாநி­லங்­க­ளுக்கு இடை­யி­லான பய­ணங்­கள் ஆகி­ய­வற்­றுக்­குத் தடை விதிக்­கப்­படுகிறது.

வேலை, அவ­ச­ர­நிலை, மருத்­து­வச் சேவை, கண­வன் அல்­லது மனை­வி­யைப் பார்க்­கச் செல்­வது, தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது ஆகி­ய­வற்­றுக்கு மட்­டுமே வேறு மாவட்­டங்­க­ளுக்­கும் மாநி­லங்­க­ளுக்­கும் பய­ணம் செய்­ய­லாம்.

புதிய உத்­த­ர­வின்­கீழ் குறிப்­பிட்ட சில வெளிப்­புற உடற்­ப­யிற்­சி­

க­ளுக்கு மட்­டுமே அனு­மதி வழங்­கப்­படும் என்­றார் பிர­த­மர் முகை­தீன்.

இந்­நி­லை­யில், கொவிட்-19

கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க மலே­சி­யா­வி­லும் இந்­தோ­னீ­சி­யா­வி­லும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள மாவட்ட, மாநி­லங்­க­ளுக்­கி­டை­யி­லான பய­ணத் தடையை மீற

ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் முயன்­ற­னர்.

மலே­சிய, இந்­தோ­னீ­சிய போலி­சார் விழிப்­பு­டன் இருந்து சாலை­களில் தடுப்­பு­களை அமைத்து நோன்­புப் பெரு­நா­ளைக் கார­ணம் காட்டி பய­ணத் தடையை மீற முயன்­ற­வர்­களை தடுத்து நிறுத்­தி­னர்.

மலேசியாவில் வேறு மாவட்­டங்­கள், மாநி­லங்­களை நோக்கி பய­ணம் செய்­து­கொண்­டி­ருந்த வாக­னங்­க­ளுக்கு போலிசார் அனு­மதி மறுத்து திருப்­பி­விட்­ட­னர்.

வேறு மாவட்­டங்­கள், மாநி­லங்­கள் ஆகி­ய­வற்­றில் இருக்­கும் தங்­கள் குடும்­பத்­தி­னர், உற­வி­னர்­கள், நண்­பர்­கள் ஆகி­யோ­ருக்கு

நோன்­புப் பெரு­நாள் பல­கா­ரங்­கள், புத்­தா­டை­கள் கொடுக்க அங்கு செல்­வ­தாகப் பலர் கூறி­னர். ஆனால் இதற்கு போலி­சார் கொஞ்­சம்­கூட அச­ர­வில்லை. மலே­சி­யா­வில் அன்­றாட கொவிட்-19 பாதிப்பு 3,000க்கும் 5,000க்கும் இடையே பதி­வாகி வரு­கிறது.

கடைத்­தொ­கு­தி­க­ளி­லும் நோன்­புப் பெரு­நாள் சந்­தை­க­ளி­லும் தொடர்ந்து கூட்­டம் அலை­மோ­தி­னால் இம்­மா­தம் இறு­திக்­குள் அன்­றா­ட பாதிப்பு 7,000ஆக அதி­க­ரிக்­கும் அபா­யம் இருப்­ப­தாக மலே­சிய சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் அச்­சம் தெரி­வித்­துள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் நில­வ­ரப்­படி மலே­சி­யா­வில் மேலும் 26 பேர் கொவிட்-19 கார­ண­மாக மாண்­ட­னர்.

மேலும் 3,733 பேருக்­குக்

கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

இதற்­கி­டையே, இந்­தோ­னீ­சி­யா­வில் பய­ணத் தடையை மீறி வேறு மாநி­லங்­க­ளுக்­குள் நுழைய முயன்ற 70,000க்கும் அதி­க­மான வாக­னங்­களை அந்­நாட்டு போலி­சார் தடுத்து நிறுத்தி அங்­கி­ருந்து திருப்­பி­விட்­ட­னர். ஏறத்­தாழ 155,000 போலிஸ், ராணுவ, போக்­கு­வ­ரத்து அதி­கா­ரி­கள் சாலை­களில் தடுப்­பு­களை அமைத்து அவ்­வ­ழி­யா­கச் செல்­லும் வாக­னங்­க­ளைச் சோத­னை­

யி­ட்டனர்.

மேற்கு ஜாவா­வில் மட்­டும் பய­ணத் தடையை மீற முயன்ற கிட்­டத்­தட்ட 36,000 கார்­கள் மற்­றும் மோட்­டார் சைக்­கிள்­களை அதி­கா­ரி­கள் திருப்­பி­விட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!