பாலஸ்தீனர்கள், இஸ்‌ரேலிய போலிசாரிடையே கைகலப்பு

ஜெரு­ச­லம்: இஸ்­‌ரே­லின் ஜெரு­ச­லம் நக­ரில் உள்ள அல் அக்சா பள்­ளி­வா­ச­லுக்­கும் அரு­கில் பாலஸ்­தீ­னர்­க­ளுக்­கும் இஸ்­‌ரே­லிய போலி­சா­ருக்­கும் இடையே நேற்று கைக­லப்பு மூண்­ட­தாக ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.

அவ்­வி­டத்­தில் குவிந்த இஸ்­‌ரே­லி­யப் பாது­காப்­புப் படை­யி­னர் மீது நூற்­றுக்­க­ணக்­கான பாலஸ்­தீ­னர்­கள் கற்­களை வீசி­ய­தா­க­வும் அதற்­குப் பதி­லடி தரும்­வ­கை­யில் இஸ்­‌ரே­லிய போலி­சார் ஆர்ப்­பாட்­டக்­

கா­ரர்­க­ள் மீது ஸ்டன் கிரெனேட் எனப்படும் செய­லி­ழக்கச் செய்யும் கையெ­றிக் குண்­டு­களை வீசி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

அது­மட்­டு­மல்­லாது, ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ராக கண்­ணீர் புகை­யும் ரப்­பர் தோட்­டாக்­களும் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

1967ஆம் ஆண்­டில் நடந்த போரில் ஜெரு­ச­லம் நகரை இஸ்­‌ரேல் கைப்­பற்­றி­யது. அது இஸ்­‌ரே­லில் ஜெரு­ச­லம் தின­மாக அனு­ச­ரிக்­கப்

­ப­டு­கிறது.

ஜெரு­ச­லம் தினத்தை முன்­னிட்டு ஜெரு­ச­லத்­தில் அணி­வ­குப்பு நடத்த திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

இதன் கார­ண­மாக பாலஸ்­

தீ­னர்­க­ளுக்­கும் இஸ்­‌ரே­லிய போலி­சா­ருக்­கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று ரம­லான் மாதத்தை முன்­னிட்டு அல் அக்சா பள்­ளி­வா­ச­லில் ஆயி­ரக்­க­ணக்­கான பாலஸ்­தீ­னர்­கள் கூடி­னர். அன்று நடந்த மோத­லில் 200க்கும் மேற்­பட்­டோர் காய­ம் அடைந்­த­னர்.

கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று கிழக்கு ஜெரு­ச­லத்­தில் வன்­முறை வெடித்­தது. இதில் 100 பேர் காய­முற்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!