ஜோகூருக்கு 500,000 தடுப்பூசிகள் தேவை

சிங்கப்பூர் அல்லது சீனாவிடமிருந்து பெற முயற்சி

ஜோகூர்­பாரு: மலே­சி­யா­வின் ஜோகூர் மாநி­லத்­துக்கு 500,000 தடுப்­பூ­சி­கள் தேவைப்­ப­டு­கின்­றன.

அவற்றை சிங்­கப்­பூர் அல்­லது சீனா­வி­ட­மி­ருந்து பெற முயற்சி எடுக்­கப்­படும் என ஜோகூர் முதல்­வர் ஹஸ்னி முஹ­மட் தெரி­வித்­தார். சிங்­கப்­பூர் அல்­லது சீனா­விடம் நல்­லு­ற­வைப் பயன்­ப­டுத்தி கூடு­த­லான தடுப்­பூ­சி­கள் பெறப்­படும். இது, குறைந்­த­பட்­சம் 250,000 பேருக்கு பய­ன­ளிக்­கும் என்­றார் அவர்.

"கடந்த காலங்­களில் தனி­ந­பர் பாது­காப்புச் சாத­னங்­கள், கிருமி நாசினி திர­வம், சுவா­சக் கரு­வி­கள் உள்­ளிட்ட மருத்­துவ உப­க­ர­ணங்­களை ஜோகூர் மாநி­லத்­துக்கு இரு நாடு­களும் தாராளமாக நன்­கொ­டை­யாக வழங்­கி­யுள்­ளன.

"நமது அண்டை நாடான சிங்­கப்­பூ­ரி­டம் கூடு­த­லான தடுப்­பூ­சி­கள் இருந்­தால் மலே­சிய மருந்­தாக்க ஒழுங்­கு­முறை முக­வை­யின் அனு­ம­தி­யு­டன் ஜோகூர் வாங்க விரும்புகிறது.

"சீனா­வைப் பொறுத்­த­வரை அந்­நாட்­டி­ட­மி­ருந்து தடுப்­பூ­சி­களை வாங்­கும் ஜோகூ­ரின் விருப்­பம் குறித்து வெளி­யு­றவு அமைச்­சர் ஹிஷா­மு­தீன் ஹுசை­னி­டம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­து.

"வரும் அக்­டோ­பர் மாதத்­திற்­குள் 80 விழுக்­காடு மாநில மக்­க­ளுக்கு தடுப்­பூ­சி­கள் போடு­வது மிக­வும் முக்­கி­யம். அப்­போ­து­தான் முழு­மை­யான பாது­காப்பை அடைய முடி­யும்," என்று திரு ஹஸ்னி முஹமட் குறிப்­பிட்­டார்.

வரும் வாரங்­களில் ஜோகூ­ருக்கு கூடு­த­லாக தடுப்­பூ­சி­களை வழங்க பிர­த­மர் முகை­தீன் யாசின் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் சொன்­னார். இவை, மாநி­லம் முழு­வ­தும் உள்ள 36 தடுப்­பூசி நிலை­யங்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­படும்.

"நமக்கு அதிகளவு தடுப்பூசிகள் கிடைத்ததும் குறைந்தது 15 தனி யார் மருத்துவமனைகள், 32 தனி யார் மருந்தகங்களில் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்படும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 20,000 பேருக்குத் தடுப்பூசி போட முடியும்," என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையே மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் சொந்தமாக சைனோஃபார்ம், மொடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.

ஆனால் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளாக அவை இருக்க வேண்டும் என்று தேசிய தடுப்பூசி இயக்கத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஜமாலுதீன் நினைவூட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!