செய்–திக்–கொத்து

தைவா­னில் கட்­டுப்­பா­டு­கள் நீட்­டிப்பு

தைப்பே: கிரு­மிப் பர­வல் இன்­னும் கட்­டுக்­குள் கொண்டு வரப்­ப­டா­த­தால், கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் இம்­மா­தம் 28ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­ப­டு­வ­தாக தைவான் அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது. கோடை விடு­முறை வரைத் தொடர்ந்து பள்­ளி­கள் மூடப்­பட்­டி­ருக்­கும் என்­றும் கூறப்­பட்டுள்­ளது.

இதற்­கி­டையே, ஜப்­பான் நன்­கொ­டை­யாக அளித்த 1.24

மில்­லி­யன் ஆஸ்ட்­ரா­ஸெ­னிகா தடுப்­பூ­சி­களை தைவான் இந்த வாரம் மக்­க­ளுக்­குப் போடத் தொடங்­கும் என்­று அதன்

பிர­த­மர் சு செங்-சாங் தெரி­வித்­தார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட

பய­ணி­க­ளுக்கு ஸ்பெ­யின் அனு­மதி

மலாகா: உலக நாடு­கள் அனைத்­தி­லி­ருந்­தும் தடுப்­பூசி

போட்­டுக்­கொண்ட பய­ணி­களை அனு­ம­திக்­கும் வகை­யில் தனது அனைத்­து­லக எல்­லையை நேற்று முதல் திறந்­துள்­ளது

ஸ்பெ­யின். ஆனால் ஆபத்­தான நாடு­கள் பட்­டி­ய­லி­லி­ருந்து பிரிட்­டன் இன்­ன­மும் ஸ்பெ­யினை நீக்­கா­தது அதற்­குப் பின்

­ன­டை­வாக இருக்­கக்­கூ­டும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

இருப்­பி­னும், கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள சுற்­று­லாத் துறை, பய­ணி­க­ளின் வரு­கை­யால் புத்­து­யிர் பெறும் என்று நம்­புகிறது ஸ்பெயின்.

பெண் குழந்­தைக்கு பாட்­டி­க­ளின் பெய­ரைச் சூட்­டிய ஹேரி-மேகன்

மலாகா: பிரிட்­டன் இள­வ­ர­சர் ஹேரி-மேகன் தம்­ப­திக்கு கலி­ஃபோர்­னி­யா­வில் இரண்­டா­வது குழந்தை பிறந்­தது. இந்த குழந்­தைக்கு, லில்­லி­பெட் 'லில்லி' டயானா எனப் பெயர்

சூட்­டப்­பட்­டுள்­ளது. இங்­கி­லாந்து ராணி­யும் தனது பாட்­டி­

யு­மான எலி­ச­பெத்­தின் புணை­பெ­ய­ரான லில்­லி­பெட் என்­ற­தோடு தனது தாயார் டயா­னா­வின் பெய­ரை­யும் சேர்த்து வைத்­துள்­ள­தாக செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் ஹேரி கூறி­னார்.

கமலா ஹாரிஸ் சென்ற

தனி விமானத்தில் கோளாறு

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் முதல் அரசுமுறை பயணமாக கௌத்தமாலாவுக்குச் சென்றார். ஆனால் அவர் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், 30 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் விமான நிலையத்துக்கே திரும்பியது. பின்னர் வேறு விமானத்தில் தனது பயணத்தைத் தொடர்ந்த கமலா ஹாரிஸ் திட்டமிட்டபடி கௌத்தமாலாவுக்குச் சென்றடைந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!