இந்தோனீசியா: மூன்று வகை கிரு­மிப் பர­வல்

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் நேற்று 12,264 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர். இது சென்ற பிப்­ர­வரி மாதத்­திற்­குப் பிறகு ஆக அதிக எண்­ணிக்­கை­யா­கும்.

ஜகார்த்­தா­வில் ஆக அதி­க­மா­னோர் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தா­லும் மேற்கு ஜாவா, மத்­திய ஜாவா­வி­லும் கிரு­மித் தொற்று குறிப்­பி­டத்­தக்க அளவு உயர்ந்­துள்­ளது.

மத்­திய ஜாவா­வின் குதுஸ் பகுதி­யில் சுமார் 930 புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின. சென்ற வாரம் இந்த எண்­ணிக்கை 26ஆக இருந்­தது.

தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை பெரு­ம­ளவு அதி­க­ரித்­துள்­ள­தற்கு டெல்டா வகை கிருமி கார­ண­மாக இருக்­கக்­கூ­டும் என்று சுகா­தார அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

12 மாநி­லங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட முழு-மர­பணு பரி­சோ­த­னை­யின்­போது 145 மாதி­ரி­களில் உலக சுகா­தார நிறு­வ­னம் அறி­வித்த ஆபத்­தான 3 வகை கிரு­மி­களில் ஏதே­னும் ஒன்று இருப்­ப­து கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­க­வும் அவற்­றில் 104ல் டெல்டா வகை கிருமி உள்­ள­தா­க­வும் சுகா­தார அமைச்­சின் செய்­தித் தொடர்­பா­ளர் சிட்டி நதியா டார்­மிஜி சொன்­னார்.

அங்கு மருத்­து­வ­மனை படுக்கை வச­தி­கள் ஏற்­கெ­னவே கிட்­டத்­தட்ட 70 விழுக்­காடு நிரம்­பி­விட்­ட­தா­லும் நெருக்­கடி ஏற்­படும் நிலை இருப்­ப­தா­லும், கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த பெரி­ய­ள­வி­லான கட்­டுப்­பா­டு­கள் வேண்­டும் என்று நிபு­ணர்­கள் வலி­யு­றுத்­து­கின்­ற­னர். ஆனால் அவ்­வாறு செய்ய அர­சாங்­கம் தயக்­கம் காட்­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!