வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு ‘புக்கெட்’ திறந்துவிடப்படுகிறது

பேங்­காக்: தாய்­லாந்து தனது உல­கப் புகழ்­பெற்ற சுற்­று­லாத்­த­லமான புக்­கெட் தீவை அனைத்­து­ல­கச் சுற்­று­லாப் பய­ணி­க­ளுக்­குத் திறந்து­வி­டும் திட்­டத்தை முடுக்­கி­விட்­டுள்­ளது. இதன்­மூ­லம் கொரோனா பர­வ­லால் நலி­வ­டைந்­துள்ள சுற்­று­லாத்­துறை புத்­து­யிர் பெறும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. தாய்­லாந்தை டெல்டா வகைக் கொரோனா கிருமி அச்­சு­றுத்தி வரும் வேளை­யில் அந்­நாடு துணிச்­ச­லாக இந்த நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ளது.

கொரோனா தொற்று அச்­சம் குறைந்­துள்ள நாடு­க­ளைச் சேர்ந்­தோ­ரும் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்கொண்­டோ­ரும் தனி­மைப்­ப­டுத்­த­லின்றி புக்­கெட் தீவுக்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வர். நாட்டை அனைத்­து­ல­கப் பய­ணி­க­ளுக்கு முழு­மை­யா­கத் திறப்­ப­தற்கு இது ஒரு முன்­னோட்­ட­மா­கும் என்­றும் இது வெற்­றி­ய­ளித்­தால் வரும் அக்­டோ­பர் மாதத்­திற்­குள் தாய்­லாந்து வெளி­நாட்­டுப் பய­ணி­க­ளுக்கு முழு­மை­யா­கத் திறக்­கப்­படும் என்று கூறப்­ப­டு­கிறது.

சுற்­று­லாப் பய­ணி­க­ளின் வருகை­யின்றி புக்­கெட் தீவின் கடற்­கரை­கள் வெறிச்­சோ­டிக் காணப்­படு­கின்­றன. அங்­குள்ள ஏரா­ள­மான உண­வ­கங்­கள், கேளிக்கை விடு­தி­கள், உடம்­புப்பிடி நிலை­யங்­கள் ஆகி­யவை வரு­மா­னமின்றி மூடிக்­கி­டக்­கின்­றன. நாட்­டின் உயிர்­நா­டி­யான சுற்­று­லாத்­து­றையை படிப்­ப­டி­யா­கத் திறப்­ப­தன்­மூ­லம் நமது பொரு­ளா­தா­ரம் மீண்­டும் மேம்­ப­டை­யும் என புக்­கெட் சுற்­று­லாத்­து­றை­யின் தலை­வ­ர் தானெத் தந்­தி­பி­ரி­ய­கிஜ் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார். இருப்­பி­னும் கொரோ­னா­வுக்கு முந்­தைய காலத்­தில் வருகை தந்த வெளி­நாட்­டுச் சுற்­று­லாப் பய­ணி­க­ளின் எண்­ணிக்­கையை இப்­போது எதிர்­பார்க்­க­மு­டி­யாது. இந்த ஆண்­டின் மூன்­றா­வது காலாண்­டில் 100,000 வெளி­நாட்­டுச் சுற்­று­லாப் பய­ணி­கள் வரக்­கூ­டும் என்று கணிக்­கப்­பட்­டுள்­ளது. கொரோ­னா­வுக்கு முந்­தைய கால­கட்­டத்­தில் 2.5 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் இந்­தத் தீவுக்கு வருகை தந்­த­னர்.

அனைத்­து­ல­கப் பய­ணி­க­ளுக்குத் திறந்­து­வி­டும் முதல் மாதத்­தில் மட்­டும் ஆறு விமான நிறு­வ­னங்­க­ளின் 426 விமா­னங்­களில் 8,281 பேர் புக்­கெட் தீவுக்குப் பய­ணம் மேற்­கொள்ள பதி­வு­செய்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பொரு­ளி­ய­லும் வர்த்­த­க­மும் முன்­னோக்­கிச் செல்ல இந்த நடவடிக்கை தேவையானது என்று பிரதமர் பிரயுத் சான் ஒசா நேற்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!