யூரோ 2020: நட்சத்திரப் பட்டாளத்தை எதிர்கொள்ளவிருக்கிறது இத்தாலி

மியூனிக்: ஐம்­பத்து மூன்று ஆண்­டு­களில் முதன்­மு­றை­யாக யூரோ கிண்­ணத்தை வெல்­லும் இலக்­கு­டன் இருக்­கும் இத்­தாலி, நட்­சத்­திர ஆட்­டக்­கா­ரர்­க­ளின் அணி­வ­குப்­பைக் கொண்­டுள்ள பெல்­ஜி­யத்­து­டன் காலி­று­திச் சுற்­றில் மோத­வுள்­ளது.

பெல்­ஜி­யம் இது­வரை கிண்­ணத்தை வென்­ற­தில்லை, ஆனால் கிண்­ணத்தை வெல்­வ­தற்­கான வாய்ப்­பு­கள் இப்­போ­தி­ருக்­கும் அளவு இதற்கு முன் இருந்­த­தில்லை.

உல­கின் ஆகச் சிறந்த மூன்று தேசி­யக் காற்­பந்து அணி­களில் ஒன்­றாக விளங்­கிய இத்­தாலி, சென்ற உல­கக் கிண்­ணப் போட்­டிக்­குத் தகு­தி­பெ­றத் தவ­றி­யது. இழந்த பெயரை அணிக்கு மீட்­டுத் தரும் முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளார் பயிற்­று­விப்­பா­ளர் ராபர்ட்டோ மன்­சினி.

பொது­வாக இத்­தாலி என்­றால் பல நட்­சத்­திர விளை­யாட்­டா­ளர்­கள் நினை­வுக்கு வரும். இம்­முறை அணி­யில் இடம்­பெற்­றுள்ள பலர் அதி­கம் கேள்­விப்­ப­டாத விளை­யாட்­டா­ளர்­கள். எனி­னும் இந்த யூரோ­வில் இது­வரை இத்­தா­லி­யின் விளை­யாட்டு அதன் ரசி­கர்­கள், நடு­நிலை ரசி­கர்­கள் இரு தரப்­பி­ன­ரை­யும் கவர்ந்­துள்­ளது. இரண்­டாம் சுற்­றில் ஆஸ்­தி­ரி­யா­வுக்கு எதி­ரா­கச் சற்­றுத் தடு­மா­றி­னா­லும் ஒரு­வ­ழி­யாக 2-1 என்ற கோல் கணக்­கில் ஆட்­டத்தை வென்­றது இத்­தாலி. அணி­யின் உண்­மை­யான ஆற்­றல் பெல்­ஜி­யத்­திற்கு எதி­ரா­கத் தெரி­ய­வ­ர­லாம்.

கடந்த 11 ஆட்­டங்­களில் ஒரு முறை மட்­டுமே கோலை விட்ட இத்­தா­லி­யைத் தோற்­க­டிக்­கும் ஆற்­றல் பெல்­ஜிய வீரர்­க­ளி­டம் உள்­ளது. ரொமேலு லுக்­காகு, ஈடன் ஹஸார்ட், கெவின் டி பிரய்ன போன்ற விளை­யாட்­டா­ளர்­கள், தலை­சி­றந்த தற்­காப்பு வீர்­க­ளை­யும் சாதா­ர­ண­மாக்­கக்­கூ­டி­ய­வர்­கள்.

இத்­தா­லி­யின் பெறும் பலம், அணி­யின் சிறந்த குழு உணர்வு. அந்த அம்­சத்­தைக் குறைத்து மதிப்­பி­ட­மு­டி­யாது.

நாளை பின்­னி­ரவு மூன்று மணிக்­குக் காலி­று­திச் சுற்­றில் இத்­தா­லி­யும் பெல்­ஜி­ய­மும் மோது­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!