யூரோ 2020: பெல்ஜிய நட்சத்திர ஆட்டக்காரர்களை அடக்கினர் இத்தாலிய வீரர்கள்

மியூ­னிக்: யூரோ 2020-இல் பெல்­ஜி­யத்தை வென்று தனது ஆற்­றல் குறித்து பல­ருக்கு இருந்த சந்­தே­கத்­தைத் தீர்த்­து­வைத்­தது இத்­தாலி. பல நட்­சத்­திர விளை­யாட்­டா­ளர்­க­ளைக் கொண்­டுள்ள பெல்­ஜி­யத்­திற்கு எதி­ரா­கச் சிறப்­பாக ஆடி போட்­டி­யின் அரை­யி­று­திச் சுற்­றுக்­குத் தகு­தி­பெற்­றது இத்­தாலி.

போட்டி தொடங்­கி­ய­போது தற்­போ­தைய இத்­தா­லிய விளை­யாட்­டா­ளர்­க­ளைப் பற்றி பலர் அதி­கம் கேள்­விப்­ப­ட­வில்லை. அத­னால் அணி மீதான எதிர்­பார்ப்­பு­கள் குறை­வாக இருந்­தன.

இப்­போதோ 53 ஆண்­டு­களில் முதன்­மு­றை­யாக இத்­தாலி யூரோ கிண்­ணத்­தைக் கைப்­பற்­றக்­கூ­டும் என்ற நம்­பிக்கை பிறந்­துள்­ளது.

சில வாய்ப்­பு­களை உரு­வாக்­கி­ய­போ­தும் அவற்­றைக் கோலாக்­கத் தவ­றி­யது பெல்­ஜி­யம். சிறந்த விளை­யாட்­டா­ளர்­கள் இருந்­தும் அனைத்­து­ல­கப் போட்டி என்று வரும்­போது பெல்­ஜி­யம் எதிர்­பார்ப்­பு­க­ளைப் பூர்த்­தி­செய்­யத் தவ­றி­விட்­டது.

ஆட்­டத்­தைத் தன்­னம்­பிக்­கை­யு­டன் எதிர்­கொண்ட இத்­தா­லிக்கு எதி­ராக பெல்­ஜி­யத்­தின் நட்­சத்­திர விளை­யாட்­டா­ளர்­கள் சோபிக்­க­வில்லை.

அரை­யி­று­திச் சுற்­றில் இத்­தாலி ஸ்பெ­யி­னைச் சந்­திக்­க­வுள்­ளது.

போட்­டி­யில் அதிக கோல்­க­ளைப் போட்­டுள்ள ஸ்பெ­யினை வெல்­வது இத்­தா­லிக்கு ஒரு புதிய சவால்.

2012 யூரோ­வின் இறு­தி­யாட்­ட­த்­தில் இத்­தா­லியை 4-0 என்ற கோல் கணக்­கில் வீழ்த்­தி­யது ஸ்பெ­யின். ஆனால் 2016 போட்­டி­யின் இரண்­டாம் சுற்று ஆட்­டத்­தில் இத்­தாலி 2-0 என்ற கோல் கணக்­கில் வென்று ஸ்பெ­யினை வெளி­யேற்­றி­யது.

இந்­தப் போட்­டி­யில் நில­வ­ரம் வேறு. சென்ற உல­கக் கிண்­ணப் போட்­டிக்­குத் தகு­தி­பெ­றத் தவ­றிய இத்­தாலி, தற்­போது இழந்த பெயரை விரை­வில் மீட்­டுக்­கொள்­ளும் முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ளது.

தற்­காப்பு ஆட்­டத்­திற்­குப் பிர­ப­ல­மான இத்­தா­லி­யின் ஆட்­டம் இந்­தப் போட்­டி­யில் ஓர­ளவு கவர்ச்­சி­யா­க­வும் இருந்­து­வந்­துள்­ளது.

சிறந்த முன்­னிலை ஆட்­டக்­கா­ரர்­க­ளைக் கொண்ட ஸ்பெ­யி­னுக்கு எதி­ராக கவ­ன­மாக இருத்­தல் அவ­சி­யம். இத்­தா­லிக்­குச் சிறப்­பாக ஆடி­யுள்ள லியோ­னார்டோ ஸ்பி­னட்­ஸோலா காய­முற்­ற­தால் இனி போட்­டி­யில் விளை­யா­ட­மாட்­டார். அது, இத்­தா­லிக்­குப் பின்­ன­டை­வாக அமை­ய­லாம்.

மற்­றொரு காலி­று­தி­யாட்­டத்­தில் பெனால்­டி­களில் ஸ்பெ­யின் சுவிட்­சர்­லாந்தை வென்­றது.

கோல் மழை பொழிந்த வண்­ணம் இருந்த ஸ்பெ­யின் அணியை நன்கு கையாண்­டது சுவிட்­சர்­லாந்து.

ஆட்­டம் 1-1 எனச் சம­நி­லை­யில் முடிந்­தது. ஆனால், சுவிட்­சர்­லாந்து பெனால்­டி­களில் கவ­ன­மாக இருக்­கத் தவ­றி­யது.

போட்­டி­யில் இது­வரை ஆடிய ஐந்து ஆட்­டங்­களில் இரண்­டில் ஸ்பெ­யின் மிகச் சிறப்­பாக ஆடி­யது, இதர மூன்று ஆட்­டங்­களில் சுமா­ரா­கத்­தான் விளை­யா­டி­யது.

இத்­தா­லிக்கு எதி­ரான அரை­யி­று­தி­யாட்­டத்­தில் ஸ்பெ­யி­னின் முன்­னிலை வீ­ரர்­கள் சிறப்­பாக ஆடு­வது அவ­சி­யம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!