உயிர்வாயு இல்லாமல் பலர் உயிரிழப்பு

குல்னா: பங்­ளா­தே­ஷின் கொரோனா தொற்­றின் பெரும் குழு­ம­மாக உரு­வெ­டுத்­தி­ருக்­கும் குல்னா பகு­தி­யில் சட­லங்­கள் குவி­வ­தைப் போல் காலி உயிர்­வாயு உரு­ளை­களும் குவி­கின்­றன.

கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த பங்­ளா­தேஷ் அர­சாங்­கம் கடும் கட்­டுப்­பா­டு­க­ளோடு ஒரு வார முடக்க நிலையை அறி­வித்­துள்ள போதும், குல்­னா­வில் நிலைமை மேம்­ப­ட­வில்லை.

முடக்க நிலை நடப்­பில் இருந்­தா­லும் தொழிற்­சா­லை­கள் வழக்­கம் போல் இயங்­கிக் கொண்­டி­ருப்­ப­தால், மக்­க­ளின் நட­மாட்­டம் தொடர்ந்து இருக்­கிறது.

"மோச­மான நிலை­யில் என் சகோ­த­ரரை அழைத்து வந்­தேன். ஆனால் இங்கு மருத்­துவ படுக்­கை­யும் இல்லை, உயிர்­வா­யு வசதியும் இல்லை. சுவா­சிக்க முடி­யா­மல் மருத்­து­வ­ம­னை­யின் ஒரு மூலை­யில் அவர் மாண்­டு­விட்­டார்," என்­றார் 42 வயது ஆட­வர் ஒரு­வர்.

கடந்த ஜூலை 1ஆம் தேதி குல்­னா­வில் 46 பேர் தொற்­றுக்­குப் பலி­யா­கி­னர். இதற்கு முன்பு இங்கு மாண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை ஒற்றை இலக்­கத்­தில் மட்­டுமே இருந்­தது.

குல்னா அர­சாங்க மருத்­து­வ­ம­னை­யில் 400 படுக்­கை­களும் நிரம்பி வழி­வ­தாக கூறும் அதன் தலைமை மருத்­து­வர் உயிர்­வாயு தட்­டுப்­பாடு நில­வு­வ­தாக கூறப்­ப­டு­வதை மறுத்­துள்­ளார்.

இந்­தி­யா­வின் மேற்கு வங்க மாநில எல்­லை­யை­ ஒட்­டி­யுள்ள இங்கு கிரு­மிப் பர­வல் அதி­க­ரித்­துள்­ள­தற்கு டெல்டா வகை கிரு­மிப் பர­வலே கார­ணம் என்­கின்­ற­னர் மருத்­து­வர்­கள்.

இதற்­கி­டையே, இந்­தோ­னீ­சி­யா­வி­லும் உயிர்­வாயு பற்­றாக்­குறை கார­ண­மாக 60 பேர் மாண்­ட­தை­ய­டுத்து, உயிர்­வாயு உற்­பத்­தி­யா­ளர்­கள் மருத்­துவ தேவை­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்க வேண்­டும் என்று அர­சாங்­கம் உத்­த­ர­விட்­டுள்­ளது. ஜாவா தீவில் உள்ள சார்ட்ஜிட்டோ மருத்துவமனையில் 63 பேர் உயிர்வாயு பற்றாக்குறை காரணமாக இறந்துவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!