‘வரும் வாரங்களில் தொற்று குறையும்’

கோலா­லம்­பூர்: முடுக்­கி­வி­டப்

பட்­டுள்ள தடுப்­பூசி போடும் பணி, சிறப்­பாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் ஆகி­ய­வற்­றைத் தொடர்ந்து மலே­சி­யா­வில் இனி வரும் வாரங்­களில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் குறை­யும் என்று நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார் சுகா­தார இயக்­கு­நர் நூர் ஹிஸாம் அப்­துல்லா.

மலே­சி­யா­வில் ஆக அதி­க­மாக சனிக்­கி­ழ­மை­யன்று 9,353 தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின. நேற்று 9,105 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர்.

கடைசி நான்கு நாட்­க­ளாக தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை 9,000த்திற்­கும் மேலா­கவே உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

"கடந்த சில நாட்­க­ளாக அதிக தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­வ­தற்­கான கார­ணம், கிரு­மித்­தொற்று குழு­மங்­களில், குறிப்­பாக சிலாங்­கூர் மற்­றும் கோலா­லம்­பூ­ரின் வணிக மையங்­களில் அதி­க­ள­வில் பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­ப­டு­வதே ஆகும்," என்­றார் அவர்.

"இருப்­பி­னும், தீவிர நட­மாட்ட கட்­டுப்­பாட்டு முறை­கள் கார­ண­மாக, இன்­னும் ஓரிரு வாரங்­களில் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை குறை­யும் என்று நான் நம்­பு­கி­றேன். அதே நேரத்­தில், தடுப்­பூசி போடும் பணி­யும் விரை­வு­ப­டுத்­தப்­பட வேண்­டும்," என்று அவர் கூறி­னார்.

இதற்­கி­டையே, தீவிர சிகிச்சை பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளோ­ரின் எண்­ணிக்­கை­யும் நேற்று அதி­க­ரித்­தது.

இப்­பி­ரி­வில் உள்ள நோயா­ளி­க­ளுக்கு இரண்டு முதல் ஐந்து வாரங்­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்க வேண்­டி­யி­ருப்­ப­தும் அதே சம­யத்­தில் சிகிச்சை தேவைப்­ப­டு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தும் இன்­னோர் சவா­லான விஷ­யம் என்­றும் அவர் சொன்­னார்.

இதை­ய­டுத்து, மருத்­து­வ­மனை படுக்­கை­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­கும் முயற்­சி­யைச் சுகா­தார அமைச்சு தீவி­ரப்­ப­டுத்தி

உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!