இவ்வாண்டின் முதல் மரணம்; அதிகமானோருக்குத் தொற்று

மெல்­பர்ன்: கிரு­மித்­தொற்­றுக்கு 90 வயது பெண் பலி­யா­ன­தைத் தொடர்ந்து ஆஸ்­தி­ரே­லி­யா­வின் நியூ சவுத் வேல்­சில் 10 மாதங்­க­ளுக்­குப் பிறகு முதல் மர­ணம் பதி­வா­னது. உள்­ளூர் கிரு­மிப் பர­வ­லால் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இவ்வாண்­டில் நேர்ந்த முதல் உயி­ரி­ழப்­பும் இது­தான்.

அதே சம­யம், நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் நேற்று 77 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர். அண்மைய கிரு­மிப் பர­வல் காலத்தில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை இது.

இவர்களில் 33 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­யி­ருந்த கால­கட்­டத்­தில் சமூக நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்­தார்­கள்.

எனவே, சிட்னி மற்­றும் அதைச் சுற்­றி­யுள்ள பகு­தி­களில் முடக்க நிலை கட்­டுப்­பாடு மேலும் மூன்று வாரங்­க­ளுக்கு நீடிக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு அதி­க­ரித்­துள்­ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்­கெ­னவே கடு­மை­யான முடக்­கத்­தின் கீழ் இருக்­கும் சிட்னி மற்­றும் அதைச் சுற்­றி­யுள்ள பகு­தி­யி­லேயே இந்த எண்­ணிக்கை அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளது. இந்த எண்­ணிக்கை 100க்கும் மேல் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­

ப­டு­கிறது.

"இச்­சூ­ழ­லில் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­வ­தற்­கான வாய்ப்பு குறைவு என்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும்," என்­றார் நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்­வர் கிளா­டிஸ் பெரெ­ஜிக்­லி­யன்.

இதற்­கி­டையே, ஆஸ்­தி­ரே­லி­யா­வில் தடுப்­பூசிப் போடும் பணி மந்­த­க­தி­யில் நடை­பெற்று வரு­கிறது. அங்கு 40 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்­கும் எளி­தில் தொற்­றுக்கு ஆளா­கக்­கூ­டி­ய­வர்­க­ளுக்­கும் மட்­டுமே தடுப்­பூசி போடப்­ப­டு­கிறது.

சிட்­னி­யில் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள 52 பேரில் முக்­கால்­வா­சிக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் ஒரு­மு­றை­கூட தடுப்­பூ­சிப் போட்­டுக் கொள்­ளா­த­வர்­கள் என்­கின்­ற­னர் சுகா­தார அதி­கா­ரி­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!