அமெரிக்கப் பயணிகளை அனுமதிக்க பிரிட்டன் திட்டம்

லண்­டன்: அமெ­ரிக்க, ஐரோப்­பிய நாடு­களில் இருந்து இங்­கி­லாந்­துக்கு வரும் பய­ணி­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­த­லின்றி நாட்­டுக்­குள் அனு­ம­திப்­பது குறித்து பிரிட்­டிஷ் அர­சாங்­கம் பரி­சீ­லனை செய்து வரு­கிறது. இது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டால் இந்த நாடு­களில் இருந்து இங்­கி­லாந்­துக்கு வரும் பய­ணி­கள் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளாக இருந்­தால் அவர்­கள் தங்­களை இனி தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளத் தேவை­யில்லை.

தொற்று ஆபத்­துக் குறை­வாக உள்ள நாடு­க­ளுக்­குச் சென்­று­வ­ரும் பிரிட்­ட­னைச் சேர்ந்­த­வர்­களும், முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக் கொண்­டி­ருந்­தால் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­வ­தில் இருந்து அவர்­க­ளுக்கு விலக்கு அளிக்­கப்­படும். அது­போல இப்­போது பிரிட்­ட­னுக்கு வரும் அமெ­ரிக்­கர்­களும் ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளைச் சேர்ந்­தோ­ரும் பிரிட்­ட­னின் இந்­தப் புதிய திட்­டத்­தால் பய­ன­டை­வர்.

தொற்று பர­வும் ஆபத்து நடுத்­த­ர­மாக உள்ள நூற்­றுக்கு மேற்­பட்ட நாடு­களை பிரிட்­டன் பட்­டி­ய­லிட்­டுள்­ளது. அந்­தப் பட்­டி­ய­லில் இடம்­பெற்ற நாடு­க­ளுக்­குச் சென்று வரும் பிரிட்­டிஷ் பய­ணி­கள் இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டி­ருந்­தால் 10 நாட்­க­ளுக்­குத் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்­ளும் விதி­யில் இருந்து அவர்­க­ளுக்கு விலக்கு அளிக்­கப்­படும்.

பிரிட்­ட­னுக்­குப் பய­ணம் மேற்­கொள்­வ­தற்கு முன்­பும் பய­ணத்­திற்­குப் பின்­பும் பய­ணி­கள் கட்­டா­ய­மாக கொவிட்-19 சோதனை செய்­து­கொள்­ள­வேண்­டும். இதே­போன்ற கொரோனா கட்­டுப்­பாட்டு விதி­மு­றை­களை அமெ­ரிக்க, ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களில் இருந்து இங்­கி­லாந்­துக்கு வரும் பய­ணி­க­ளுக்­காக பிரிட்­டிஷ் அமைச்­சர்­கள் வரை­ய­றுத்து வைத்­துள்­ள­தாக பிரிட்­ட­னின் ஃபைனான்ஸ் டைம்ஸ் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது. பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் கடந்த சில வாரங்­களில், கொவிட்-19க்கு எதி­ரான கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­யுள்­ளார். இப்­போது வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்று வரும் பிரிட்­டிஷ் மக்­கள் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளத்­தே­வை­யில்லை என்று அறி­விக்­கப்­பட்­டால் ஏரா­ள­மா­னோர் தங்­கள் அண்டை நாடு­க­ளான ஐரோப்­பிய நாடு­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொள்­வர் என்று கூறப்­ப­டு­கிறது.

ஏரா­ள­மா­னோர் இப்­போதே வெளி­நாட்­டுப் பய­ணங்­களில் ஆர்­வம் காட்­டத் தொடங்­கி­விட்­ட­னர்.

இந்­தத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்து பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன், தனது மூத்த அதி­கா­ரி­கள் அடங்­கிய குழு­வி­ன­ரு­டன் கலந்து ஆலோ­சித்து இறுதி முடிவு எடுப்­பார் என்று கூறப்­ப­டு­கிறது.

தொற்­றுக் கட்­டுப்­பாட்­டின் ஒரு முக்­கிய தளர்­வா­கக் கரு­தப்­படும் இந்­தத் திட்­டம், கூடி­ய­வி­ரை­வில் அதா­வது அடுத்த வாரத்­திற்­குள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்று ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­தத் திட்­டத்­தால் பிரிட்­ட­னின் விமா­னப்­போக்­கு­வ­ரத்து மற்­றும் பய­ணத்­துறை குறிப்­பி­டத்­தக்க அளவு புத்­து­யிர் பெறும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பிரிட்­டன் இந்த நல்ல முடிவை அறி­வித்­தால் அது அமெ­ரிக்­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்­தும் என்­ற­போதி­லும் கடந்த வாரம் பைடன் அர­சாங்­கம், தொற்று அதி­க­ரித்­துள்­ள­தால் இங்­கி­லாந்­துக்­குச் செல்­வ­தைத் தவிர்க்­கும்­படி தன் மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டது.

இப்­போது பிரிட்­டன், அமெ­ரிக்­கர்­க­ளுக்கு தன் எல்­லை­யைத் திறந்து­வி­டப் போவ­தாக கூறப்­ப­டு­வது குறித்து அமெ­ரிக்கா எந்த கருத்­தை­யும் வெளி­யி­ட­வில்லை.

முன்­ன­தாக லண்­ட­னின் ஹீத்ரூ விமான நிலைய நிர்­வா­க­மும் பிரிட்­ட­னின் முக்­கிய பயண விமா­னச் சேவை வழங்­கும் விமான நிறு­வ­னங்­களும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட அமெ­ரிக்­கப் பய­ணி­களை பிரிட்­ட­னுக்­குள் அனு­ம­திக்கு­மாறு வலி­யு­றுத்தி வந்­தன.

அவ்­வாறு பிரிட்­டன் தனது எல்­லை­யைத் திறக்­க­வில்லை எனில் இங்கு பய­ணத்­து­றை­யைச் சேர்ந்த பலர் வேலை­யி­ழக்­கக்­கூ­டும் என்று அவை கவலை தெரி­வித்­துள்­ளன.

எனவே, அமெ­ரிக்க, ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கான தனது எல்­லையை பிரிட்­டன் விரை­வில் திறக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!