காலையில் எழுந்து சமையலறைக்குச் சென்று காப்பி கலக்கும்போது, சன்னலுக்கு வெளியில் சிங்கம் ஒன்று உங்களை நோக்கி கர்ஜித்தால் எப்படி இருக்கும்?
தென்னாப்பிரிக்காவில் வனப்பகுதி ஒன்றில் உள்ள முகாம் ஒன்றில் இருந்த 46 வயது ஆடவருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. தாம் கண்ட நிகழ்வுகளைக் கைபேசியில் காணொளி பிடித்து சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தார் அவர்.
இந்த காணொளி இவ்வாண்டு ஜூன் 25ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. முகாமில் திறந்த சமையலறையில் காப்பி கலக்கிக்கொண்டிருந்த அவரை சன்னல் வழியாக காணும்போதெல்லாம் அந்தச் சிங்கம் கர்ஜித்தது.