தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் வேளையில் பூஸ்டர் தடுப்பூசிக்கு முந்தும் பணக்காரர்கள்

ஜகார்த்தா: கொவிட்-19 நோய்த்­தொற்று பர­வி­வ­ரும் சில ஆசிய நாடு­களில் மக்­கள்­தொ­கை­யில் குறிப்­பி­டத்­தக்க விழுக்­காட்­டி­னர் இன்­ன­மும் தடுப்­பூசி போட்­டி­ராத நிலை­யில், பணக்­கா­ரர்­கள் பலர் 'பூஸ்­டர்' தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொள்ள வரி­சை­யில் முந்­தும் நிலை ஏற்­ப­டு­கிறது.

ஏற்­கெ­னவே தடுப்­பூசி பற்­றாக்­கு­றை­யால் அவ­தி­யு­றும் இந்­தோ­னீ­சியா, தாய்­லாந்து, பிலிப்­பீன்ஸ் உள்­ளிட்ட நாடு­களில் இந்­தப் போக்கு காணப்­ப­டு­கிறது.

இந்­தோ­னீ­சி­யா­வில் 'பூஸ்­டர்' தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள சுகா­தா­ரத் துறை ஊழி­யர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டு­கிறது.

ஆனால், தாங்­கள் 'பூஸ்­டர்' தடுப்­பூ­சி­யைப் பெற்­றுக்­கொண்­டது குறித்து அர­சி­யல் தலை­வர்­கள் சிலர் கலந்­து­ரை­யா­டு­வது கேம­ரா­வில் பதி­வா­கி­யது.

அதி­பர் செய­ல­ரின் அதி­கா­ர­பூர்வ ஒளி­வ­ழி­யில் இந்­தக் கலந்­து­ரை­யா­டல் தவ­று­த­லாக ஒளி­ப­ரப்­பா­னது. அதில், ஃபைசர் தடுப்­பூ­சிக்­காக தாம் காத்­துக்­கொண்­டி­ருப்­ப­தால் 'பூஸ்­டர்' தடுப்­பூ­சி­யைப் பெற்­றுக்­கொள்­ள­வில்லை என இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ கூறு­வதை காண முடி­கிறது.

இது­கு­றித்து ஊட­கங்­களில் கேள்­வி­க­ளுக்கு திரு விடோ­டோ­வின் அலு­வ­ல­கம் கருத்­து­ரைக்­க­வில்லை. சம்­பந்­தப்­பட்ட அந்­தக் காணொ­ளி­யும் நீக்­கப்­பட்­டது.

தாய்­லாந்­தில் கர்ப்­பி­ணி­ களுக்கும் சுகா­தா­ரப் பணி­யா­ளர் ­க­ளுக்­கும் போடப்­ப­ட­வேண்­டிய ஃபைசர் தடுப்­பூ­சி­க­ளை தங்­க­ளது குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்­கும் உத­வி­யா­ளர்­க­ளுக்­கும் வழங்­கி­ய­தற்­காக இரு மருத்து­வம­னை­களில் இயக்­கு­நர் மற்­றும் மருத்­து­வர் ஆகிய இரு­வர் மீது விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­கிறது.

உல­கம் முழு­வ­தும் டெல்டா வகை கிருமி, கொவிட்-19 தொற்றை பரப்­பி­வ­ரும் வேளை­யில், அதற்கு எதி­ராக 'பூஸ்­டர்' தடுப்­பூ­சி­கள் பாது­காப்பு வழங்­கு­வ­தாக ஆய்­வு­களில் தெரி­ய­வந்­துள்­ளது. ஏழை நாடு­ களுக்­குப் போது­மான அளவு தடுப்­பூ­சி­கள் கிடைக்­கும் வரை 'பூஸ்­டர்' தடுப்­பூ­சித் திட்­டத்தை நிறுத்தி வைக்­கு­மாறு வளர்ச்­சி­ய­டைந்த நாடு­க­ளி­டம் உல­கச் சுகா­தார நிறு­வ­னம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!