துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி

ஃபுளோரிடா: ஆப்கானிஸ்தானில் முன்பு ராணுவப் பணியில் ஈடுபட்ட முன்னாள் அமெரிக்க ராணுவ அதிகாரி நான்கு பேரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். மாண்டவர்களில் கைக்குழந்தை ஒன்றும் அடங்கும். இந்தச் சம்பவம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் அமெரிக்க நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை நிகழ்ந்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகளை நோக்கி 33 வயது பிரயன் ரைலி சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பிறகு அதிகாரிகளிடம் அவர் சரணடைந்தார். அவரை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் காரணம் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

தாக்குதலில் 11 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார்.

தாக்குதலில் போலிஸ் அதிகாரிகள் யாரும் காயம் அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!