சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்; சாட்சியமளிக்கும் உறவுகள்

ஆம்ஸ்டர்டாம்: 2014ஆம் ஆண்­டில் போரா­ளி­க­ளின் கட்­டுப்­பாட்­டில் இருந்த உக்­ரே­னின் கிழக்­குப் பகு­திக்கு மேல் பறந்­து­கொண்­டி­ருந்த மலே­சிய விமா­னம் சுட்டு வீழ்த்­தப்­பட்­டது. விமா­னத்­தில் இருந்த 298 பேர் மாண்­ட­னர்.

இந்­நி­லை­யில், மாண்­டோ­ரின் உற­வி­னர்­கள் நேற்­றி­லி­ருந்து நீதிமன்­றத்­தில் சாட்­சி­யம் அளிக்க தொடங்­கி­யுள்­ள­னர். விமா­னம் சுட்டு வீழ்த்­தப்­பட்ட குற்­றத்­துக்­குக் கார­ண­மா­ன­வர்­கள் என்று சந்­தே­கிக்­கப்­படும் நான்கு போராளிகள் தலை­ம­றை­வாக உள்­ள­னர். அவர்­களில் மூவர் ரஷ்­யர்­கள், ஒரு­வர் உக்­ரே­னி­யர். அவர்­கள் மீது கொலைக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது அவர்­க­ளுக்கு எதி­ரான வழக்கு விசா­ரணை ஹாலந்­தில் நடத்­தப்­ப­டு­கிறது. விமா­னம் சுட்டு வீழ்த்­தப்­பட்­ட­போது அது ஹாலந்­தின் ஆம்ஸ்­டர்­டாம் நக­ரி­லி­ருந்து மலே­சி­யத் தலை­ந­ருக்­குச் சென்­று­கொண்­டி­ருந்­தது. மாண்­டோ­ரின் குடும்­பத்­தி­ன­ரின் சாட்­சி­யங்­களை அடுத்த மூன்று வாரங்­க­ளுக்கு நீதி­மன்­றம் கேட்­கும். சிலர் தங்­கள் சாட்­சி­யங்­களை எழுத்­து­பூர்­வ­மாக சமர்ப்­பித்­துள்­ள­னர். அவற்­றை­யும் நீதி­மன்­றம் ஆரா­யும். இந்த வழக்கு சம்­பந்­த­மா­கக் கொலைக் குற்­றச்­சாட்டை எதிர்­நோக்­கு­ப­வர்­கள் ரஷ்­யா­வில் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. ஆனால் அவர்­களை ஹாலந்­துக்கு அனுப்­பி­வைக்க ரஷ்யா மறுத்­து­விட்­டது. விமா­னம் விழுந்து நொறுங்­கி­ய­தற்­கும் தனக்­கும் எவ்­வித தொடர்­பும் இல்லை என்று ரஷ்யா திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­விட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!